அரசுக்கு கைகொடுத்தது- கூட்டமைப்பு!!

அர­சுக்கு எதி­ராக மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யால் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை நேற்­றுத் தோற்­க­டிக்­கப்­பட்­டது.

பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 92 வாக்­கு­க­ளும், எதி­ராக 119 வாக்­கு­க­ளும் கிடைத்­தன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பிரே­ர­ணையை எதிர்த்து அர­சுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர். இத­னால் குறித்த பிரே­ரணை 27 மேல­திக வாக்­கு­க­ளி­னால் தோல்­வி­ய­டைந்­தது.

உயிர்த்த ஞாயிறு தின­மன்று இடம்­பெற்ற குண்­டுத் தாக்­கு­தல்­க­ளுக்­குப் பொறுப்­பேற்று தலைமை அமைச்­சர் மற்­றும் அமைச்­ச­ரவை உள்­ளிட்ட ஒட்­டு­மொத்த அர­சும் பதவி விலக வேண்­டும் எனக் கோரி மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­வி­னால் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்த இந்த நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை மீது நேற்­று­முன்­தி­ன­மும் நேற்­றும் விவா­தங்­கள் நடை­பெற்­றன.

விவா­தங்­க­ளை­ய­டுத்து நேற்று மாலை 6.30 மணி­ய­ள­வில் பிரே­ரணை மீது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

இதன்­போது ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் அதன் பங்­கா­ளிக் கட்­சி­கள் ஆகி­ய­வற்­றின் உறுப்­பி­னர்­கள் பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளித்­த­னர்.

மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர். அத்­து­டன், சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் பல­ரும் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர். ஆனால், துமிந்த திஸா­நா­யக்க உள்­ளிட்ட சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் சிலர் வாக்­க­ளிப்­பின்­போது சபை­யில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.

அதே­வேளை, எதிர்க்­கட்சி வரி­சை­யி­லுள்ள ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் தலை­வர் டக்­ளஸ் தேவா­னந்தா மற்­றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் சிவ­சக்தி ஆனந்­தன் ஆகி­யோ­ரும் வாக்­க­ளிப்­பின்­போது சபை­யில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பங்­கா­ளிக் கட்­சி­யான தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த அமைச்­சர் வே.இரா­தா­கி­ருஷ்­ண­னும் வாக்­க­ளிப்­பின்­போது சபை­யில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.
ஆனால், எதிர்க்­கட்சி வரி­சை­யி­லுள்ள இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ர­ஸின் இரண்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அரசை எதிர்த்து பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர்.

கடந்த வரு­டம் ஒக்­டோ­பர் 26 அர­சி­யல் சதிப் புரட்­சி­யின்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து மைத்­திரி அணிப் பக்­கம் தாவிய மட்­டக்­க­ளப்பு மாவ­டட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எஸ்.வியா­ழேந்­தி­ர­னும் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார்.

இந்­த­நி­லை­யில், பெரும்­பான்­மைப் பலத்­தைக் கொண்­டி­ராத அரசு கவி­ழுமா அல்­லது காப்­பாற்­றப்­ப­டுமா என்­பது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கைக­ளிலே இருந்­தது.

நேற்­றுக் காலை­யும் மாலை­யும் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் மற்­றும் ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டம் ஆகி­ய­வற்­றில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தின் பிர­கா­ரம் கூட்­ட­மைப்­பின் 14 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அரசு மீதான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளித்­த­னர்.

குறித்த பிரே­ர­ணைக்கு எதி­ராக அதிக வாக்­கு­கள் அளிக்­கப்­பட்ட நிலை­யில் இந்த நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ரணை தோல்­வி­ய­டைந்­துள்­ளது எனச் சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய சபை­யில் அறி­வித்­தார். இதை­ய­டுத்து இன்று வெள்­ளிக்­கி­ழமை முற்­ப­கல் 10.30 மணி­வரை நாடா­ளு­மன்­றம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

You might also like