side Add

ஆழிப் பேரலை -பேர­வ­லத்­தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்!!

ஆழிப் பேர­லை­யால் காவு கொள்­ளப்­பட்­ட­வர்­க­ளின் 14ஆவது ஆண்டு நினைவு இன்று உணர்­வு­பூர்­வ­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. வடக்­கி­லும் நினைவு நிகழ்­வு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

வட­ம­ராட்சி கிழக்கு உடுத்­துறை, கட்­டைக்­காடு, மணற்­காடு ஆகிய இடங்­க­ளில் நினைவு நிகழ்­வு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லும் நினைவு நிகழ்­வு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. கிழக்கு மாகா­ணத்­தி­லும் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

2004 ஆம் ஆண்டு இந்­தி­யப் பெருங்­க­ட­லில் சுமத்­திரா தீவின் வட­மேற்­குக் கடற்­க­ரை­யில் இருந்து சுமார் 150 கிலோ­மீற்­றர் தூரத்­தில் 9.3 ரிக்­ச­டர் அள­வில் நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யாக ஏற்­பட்ட ஆழிப் பேர­லை­யால் தாய்­லாந்து, இந்­தோ­னே­சியா, மலே­சியா, இலங்கை, இந்­தியா, மாலை­தீவு ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த 2 லட்­சத்து 30 ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இலங்­கை­யில் 30 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் ஆழிப் பேர­லை­யால் உயி­ரி­ழந்­த­னர். வடக்­கில் 6 ஆயி­ர­துக்­கும் அதி­க­மா­னோர் உயி­ரி­ழந்­த­னர்.

You might also like