side Add

இராணுவத்தால் இருவருக்கு வீடுகள்!!

இராணுவத்தில் பணியாற்றும் இருவருக்கு, வன்னி படைத்தலைமையகத்தால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் முதற்கட்டமாக வவுனியா பம்பைமடு மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் இரண்டு வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் இரண்டு வீடுகளுக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது.

நன்கொடையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

நிகழ்வில் 61 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் கே.டி.சி.ஜி. திலகரத்ன, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் அனில் பீரிஸ் மற்றும் இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.

இராணுவத்தின் 61 ஆவது மற்றும் 62 ஆவது படைப்பிரிவுகளில் பணியாற்றும் நாகராசா மூர்த்தி என்பவருக்கு வவுனியா பம்பை மடுவிலும், தனுஷ்கா பிரதீப் குமார என்பவருக்கு வெலிஒய பிரதேசத்திலும் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும் ஐவருக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like