உலக தெங்கு உற்பத்தி கண்காட்சியில்- இலங்கை அமைச்சர் பங்கேற்பு!!

பிரேஸிலில் நடைபெறும் உலக தெங்கு உற்பத்தி கண்காட்சியில், இலங்கையிலிருந்து பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பங்குபற்றியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் தெங்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தெங்கு உற்பத்தியாளர்கள் தங்கள் நாட்டின் தெங்கு உற்பத்திகளை இங்கு காட்சிபடுத்தவுள்ளனர்.

இலங்கையில் தெங்கு ஆராச்சி சபையின் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தெங்கு உற்பத்தி பொருள்களும் இங்கு காட்சிபடுத்தபட்டுள்ளன.

இலங்கையில் தெங்கு உற்பத்திகளுக்கு பொறுப்பானவராக இருக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரேஸிலில் பல தெங்கு ஏற்றுமதியாளர்களையும் இறக்குமதியாளர்களையும் சந்தித்தார்

You might also like