எருக்கலம்பிட்டி மாணவன்- தேசிய ரீதியில் சாதனை!!

மன்னார் எருக்கலம்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மாணவன் எம்.வை. சஹிபுல் யமீன், ஜிம்னாஸ்ரிக் துறையில் உலக சாதனைக்காக தன்னை தயார் படுத்தி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நடை பெற்ற youth with telent போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 10 இளைஞர்கள் வீதம் 260 இளைஞர்கள் போட்டியாளராக தமது திறமைகளை வெளிக்காட்டினர்.

போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மாணவன் எம்.வை. சஹிபுல் யமீன், கண்ணாடி பெட்டிக்குள் தன்னை முழுமையாக அடைத்துக் கொண்டு அப்பெட்டியினை தண்ணீர் நிறைந்த இன்னொரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து அதன் மேல் ஐஸ் கட்டிகளை கொட்டி சுமார் 6 நிமிடங்கள் இருந்துள்ளார்.

குறித்த தேசிய ரீதியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டதோடு,கார், மோட்டடார் சைக்கிள் மற்றும் பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டார்.

குறித்த சாதனையாளரை வரவேற்கும் நிகழ்வு மன்னார் நகர நுழைவாயிலில் நேற்று இடம் பெற்றது.

மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,மன்னார் நகரசபை உறுப்பினர் என்.எம்.நகுசீன் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து சாதனை வீரனை வரவேற்றனர்.

You might also like