கடற்கரை கபடி போட்டியில் இரண்டு அணிகள் வெற்றி!!

பெண்கள் அணி

மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் மாந்தை மேற்கு பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.

அரிப்பு மைதானத்தில் இடம் பெற்ற பெண்களுக்கான இறுதியாட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலக அணியை எதிர்த்து முசலி பிரதேச செயலக அணி மோதியது.

ஆண்கள் அணி

ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.

இறுதியாட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலக அணியை எதிர்த்து மன்னார் பிரதேச செயலக அணி மோதியது.

You might also like