கட்­டுப்­பாட்­டை இழந்த வாகனம் மின் கம்­பத்­து­டன் மோதி விபத்து- இருவர் உயிரிழப்பு!!

முல்­லைத்­தீவு  மாங்­கு­ளம் – துணுக்­காய் வீதி­யில் வட­காட்­டுப் பகு­தி­யில் பய­ணித்த மகேந்­திரா ரக வாக­னம் வேகக் கட்­டுப்­பாட்­டை இழந்து வீதி­யோ­ரம் இருந்த மின் கம்­பத்­து­டன் மோதி விபத்­துக்கு உள்­ளா­ன­து. அதில்  இரு இளை­ஞர்­கள் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த­னர்.

விபத்­தில் பட்­டுப் பூச்சி பாலி­ந­க­ரைச் சேர்ந்த ஜீவ­கு­மார்- ஜினிஸ்­கு­மார் மற்­றும் குணா­ளன் – டிசாந் ஆகி­ய­ இ­ளை­ஞர்­களே பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தனர்.

மாங்­கு­ளம் சென்று திரும்­பிய நிலை­யில் வட­காட்­டுப் பிள்­ளை­யார் ஆல­யத்தை அண்­மித்த பகு­தி­யி­ல் நேற்று இரவு சுமார் 7.30 மணி­ய­ள­வில் விபத்து இடம்பெற்றது.  விபத்­தில் வாக­னத்­தின் முகப்பு பலத்த சேத­ம­டைந்­த­தோடு அதில் பய­ணித்த இரு­வ­ரும் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

படு­கா­ய­ம­டைந்த இரு­வ­ரில் ஒரு­வரை வீதி­யால் பய­ணித்த இரா­ணுவத்தினர் வாக­னத்தில்  ஏற்­றிச் சென்று மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்த்தனர். அங்கு அவர்  உயி­ரி­ழந்­தார்.

மற்றொரு இளை­ஞன் மல்­லாவி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­தி­ருந்­தமை உறுதி செய்­யப்­பட்­டது.

ஜினிஸ்­கு­மா­ரின் சட­லம் மல்­லாவி வைத்­தி­ய­சா­லை­யி­லும்,  டிசாந்­தின் சடலம் மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யி­லும் வைக்­கப்­பட்­டுள்­ளன.

விபத்து தொடர்­பில் மல்­லாவி பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

You might also like