கத்தோலிக்க திருச்சபையில்- கன்னியாஸ்திரிகளுக்கு- பாலியல் துன்புறுத்தல்!!

கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யில் பெண் துற­வி­க­ளான அருட்­ச­கோ­த­ரி­க­ளுக்­கும் பாலி­யல் துன்­பு­றுத்­தல் கொடுக்­கப்­ப­டு­கி­றது. அவர்­கள் பாலி­யல் இச்­சை­க­ளுக்காகக் கத்­தோ­லிக்­கப் பாதி­ரி­யார்­க­ளா­லும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்ற முறைப்­பா­டு­கள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன என்று தெரி­வித்­தார் கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யின் தலை­வ­ரான பாப்­ப­ர­சர் பிரான்­சிஸ்.

இஸ்­லா­மிய நாடான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு பாப்­ப­ர­சர் பிரான்­சிஸ் தற்­போது பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். அங்கு நேற்­றை­ய­தி­னம் அவர் உரை­யாற்­றி­னார்.

தனது உரை­யின் ஒரு பகு­தி­யி­லேயே இதனை அவர் ஏற்­றுக்­கொண்­டார்.

‘கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யில் கன்­னி­யாஸ்­தி­ரி­கள் சிலர் பாலி­யல் இச்­சை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்று வத்­திக்­கான் அறி­கி­றது. சில பாதி­ரி­யார்­க­ளும் பிஷப்­பு­க­ளும் கூட­இத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர். இந்­தப் பிரச்­சினை எல்லா இடத்­தி­லும் இடக்­கி­றது. ஆனால் சில பகு­தி­க­ளில் உள்ள சில திருச்­ச­பை­க­ளில் அதி­க­மாக இருக்­கி­றது. பாலி­யல் முறைப்­பா­டு­க­ளால் வத்­திக்­கான் ஏரா­ள­மான பாதி­ரி­யார்­களை இடை­நீக்­கம் செய்­துள்­ளது. இது­தொ­டர்­பான பிரச்­சி­னை­க­ளைச் சரி­செய்ய வத்­திக்­கான் நீண்ட நாள்­க­ளா­கப் பணி­யாற்றி வரு­கி­றது. வத்­திக்­கான் இந்­தப் பிரச்­சி­னை­யைக் கண்­டு­கொள்­ள­வில்லை என்று மற்­ற­வர்­கள் கூறு­வதை நான் விரும்­ப­வில்லை. அதில் உண்­மை­யில்லை. இதில் நாங்­கள் இன்­னும் சிறப்­பா­கச் செயல்­பட வேண்­டும் என்­பது மட்­டும் உண்மை. அதைத்­தான் நாங்­க­ளும் விரும்­பு­கி­றோம்’ என்று பாப்­ப­ர­சர் பிரான்­சிஸ் மேலும் தெரி­வித்­தார்.

You might also like