கருங்கண்டல் குளத்தில் அதிகரிக்கும் மணல் அகழ்வு- விவசாயிகள் பெரும் பாதிப்பு!!

மன்னார் கருங்கண்டல் குளத்தில் இருந்து அதிக மணல் அகழப்படுவதால், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குளப்பகுதி மத்திய நீர்பாசன திணைக்களத்துக்கு உரிமையுடையதாக இருப்பதால், மணல் அகழ்வுக்கு மன்னாரிலுள்ள மத்திய நீர்பாசன பொறியியலாளர் திணைக்களமே அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அகழப்படுகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் பத்து, பதினொரு அடி ஆழத்தில் மணல் அகழப்படுகிறது. இதனால் கால்நடைகள்
தோண்டப்படும் கிடங்குக்குள் தவறி வீழ்ந்து உயிரிழக்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like