கோணாவில் மாணவன் விவகாரம்- பொலிஸார் தில்லு முல்லு!!

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கஞ்சா மற்­றும் கசிப்­புக் கடத்­தல் தொடர்­பில் தக­வல் வழங்­கிய பாட­சாலை மாண­வன் மீதான தாக்­கு­தல் வழக்கை பொலி­ஸார் திசை திருப்­பி­யமை அம்­ப­ல­மா­கி­யுள்­ளது.

வன்­னிப் பிராந்­தி­யப் பொலிஸ்மா அதி­பர் நேற்­று­முன்­தி­னம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளின் ­போதே இந்­தச் சம்­ப­வம் வெளிச்­சத்­துக்கு வந்­த­துள்­ளது.

இத­னை­ய­டுத்து கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­தில் வன்­னிப் பிராந்­திய பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரின் பணிப்­புக்கு அமை­வாக மாண­வ­னின் தந்­தை­யால் புதிய முறைப்­பாடு நேற்­று­முன்­தி­னம் இரவு பதி­யப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வ­ரால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட போதை ஒழிப்பு வாரத்­தின்­போது பாட­சா­லை­க­ளி­லும் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. கோணா­வி­லில் பாட­சாலை ஒன்­றில் பொலி­ஸார் இதே­போன்று விழிப்­பு­ணர்­வுச் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­த­போது, பாட­சாலை மாண­வன் ஒரு­வன் தனது ஊரில் இடம்­பெ­றும் கஞ்சா மற்­றும் கசிப்பு வியா­பா­ரம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளான்.

இதன் பின்­னர் மாண­வ­னின் வீட்­டுக்­குச் சென்ற சிலர், மாண­வ­னின் பெற்­றோ­ரு­டன் வாய்த்­தர்க்­கத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். இரண்டு தினங்­க­ளின் பின்­னர் இரவு நேரம் ஈரு­ரு­ளி­யில் சென்ற மாண­வனை உந்­து­ரு­ளி­யில் வந்த மூன்று பேர் இடித்து வீழ்த்­தி­யுள்­ள­னர். மாண­வன் காய­ம­டைந்த நிலை­யில் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டான்.

இந்­தச் சம்­ப­வம் விபத்து என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில், பொலி­ஸார் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று தெரி­வித்து வடக்கு மாகாண முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழு­வி­லும், வடக்கு மாகாண ஆளு­நர் ராக­வ­னி­டத்­தி­லும் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.

வன்­னிப் பிராந்­தி­யப் பொலிஸ்மா அதி­ப­ருக்கு ஆளு­நர் பணிப்­புரை வழங்­கி­ய­தைத் தொடர்ந்து, நேற்று முன்­தி­னம் அவர் நேர­டி­யாக இந்த விசா­ர­ணையை முன்­னெ­டுத்­துள்­ளார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள சகல பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளை­யும் அழைத்து, மாண­வ­னின் தந்­தை­யை­யும் அழைத்து மூன்று மணி நேரம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளார். இதன் போது பல விட­யங்­கள் வெளி­வந்­துள்­ளன.

மருத்­து­வ­ம­னைக்கு வந்த போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார், மக­னின் ஈரு­ரு­ளி­யில் முன்­பக்க விளக்கு இல்லை என்­றும், முன்­பக்க பிரேக் வேலை செய்­ய­வில்லை என்­றும் கூறி­னர்.

இந்த விட­யத்தை நீதி­மன்­றுக்கு கொண்டு சென்­றால் தண்­டப்­ப­ணம் செலுத்­த­வேண்டி வரும் என்­றும், வழக்­குக்கு அலைந்து திரி­ய­வேண்டி வரும் என்­றும் கூறி­னர்.

தின­மும் மேசன் வேலை செய்து சம்­பா­திப்­ப­வன். என்­னால் வழக்­குக்கு அலைந்து திரிய முடி­யாது என்று வந்த போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸா­ரி­டம் கூறி­ய­தாக மாண­வ­னின் தந்தை பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ரி­டம் தெரி­வித்­துள்­ளார்.

இதன் பின்­னர் சிங்­க­ளத்­தில் எழு­திய கடி­தத்­தில் போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார் கையெ­ழுத்து வாங்­கி­ய­தா­க­வும் மாண­வ­னின் தந்தை குறிப்­பிட்­டுள்­ளார்.

போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார் சிங்­க­ளத்­தில், விபத்தை நீதி­மன்­றுக்­குப் பாரப்­ப­டுத்­த­வேண்­டாம் என்று எழுதி அந்­தக் கடி­தத்­தி­லேயே கையெ­ழுத்து வாங்­கி­யமை பிர­திப் பொலிஸ்மா அதி­பர் கண்­ட­றிந்­துள்­ளார்.

மேலும், சம்­ப­வம் நடை­பெற்­ற­போது காய­ம­டைந்த மாண­வனை வீட்­டுக்கு கொண்டு வந்து சேர்ப்­பித்த கடைக்­கா­ர­ரி­டமோ வேறு எவ­ரி­டமோ பொலி­ஸார் விசா­ரணை நடத்­த­வில்லை என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து பொலிஸ் அதி­கா­ரி­களை கடு­மை­யா­கக் கடிந்து கொண்ட பிர­திப் பொலிஸ்மா அதி­பர், கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­தில் புதி­தாக முறைப்­பாடு செய்­யு­மாறு மாண­வ­னின் தந்­தை­யைப் பணித்­துள்­ளார்.
இத­னை­ய­டுத்து மாண­வ­னின் தந்தை புதிய வழக்­கைப் பதிவு செய்­துள்­ளார்.

You might also like