கோத்தா மீதான வழக்கு சொல்லிச் செல்லும் செய்தி!!

ஊழ் வினைப் பயன் எங்கு சென்றாலும் துரத்தும் என்பதை சிறு வயதில் படித்திருக்கிறோம். பின்னர் விகாரைகளிலும் அத­னைச் சொல்­லித் தந்­தி­ருக்­கி­றார்­கள்.”

இலங்­கைப் பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருக்­கும் செய்தி, சண்டே ரைம்ஸ் இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­ட­போது அது தொடர்­பில் கருத்­திட்ட ஒரு­வரே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்­தார்.

கோத்­த­பா­ய­வின் கர்­ம­வினை அவ­ரைத் துரத்­து­கி­றதோ இல்­லையோ, போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பாக நம்­ப­க­மான, நீதி­யான, சுயா­தீ­ன­மான விசா­ரணை ஒன்று நடத்­தப்­ப­டாத வரை­யில் கோத்­த­பாய மட்­டு­மல்ல இலங்­கைப் படை­க­ளின் மூத்த அதி­கா­ரி­கள் பல­ரும் போர்க் காலத்­தில் பணி­யாற்றி ஓய்வு பெற்ற அதி­கா­ரி­கள் பல­ரும்­கூட இது­போன்ற வழக்­கு­களை எதிர்­கா­லத்­தில் எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும்.

கோத்­த­பாய இரட்­டைக் குடி­யு­ரிமை கொண்ட ஒரு­வர். அமெ­ரிக்­கக் குடி­ம­க­னா­க­வும் இருப்­ப­வர். அமெ­ரிக்­கச் சட்­டங்­க­ளின்­படி அந்த நாட்­டுக் குடி­ம­கன் ஒரு­வர் நாட்­டுக்கு வெளியே போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­பட்­டா­லும் அவர் மீது அமெ­ரிக்­கா­வில் வழக்­குத் தொடுக்க முடி­யும். 1996ஆம் ஆண்டு அமெ­ரிக்­கச் சட்­டப்­படி கோத்­த­பாய ராஜ­பக்ச மீது போர்க் குற்­றச்­சாட்­டு­க­ளைச் சுமத்தி நீதி­மன்­றுக்கு அவரை இழுக்க முடி­யும் என்று அமெ­ரிக்­கச் சட்­டத்­து­றைப் போரா­சி­ரி­யர் ரயன் கோட்­மன் 2014ஆம் ஆண்­டி­லேயே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

வெளி­நாட்­டுக் குடி­ம­கன் ஒரு­வரை அமெ­ரிக்­கக் குடி­ம­கன் வெளி நாடு ஒன்­றில் வைத்­துச் சித்­தி­ர­வதை செய்­தால் அதற்­கா­க­வும் அமெ­ரிக்­கா­வில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­ட­மு­டி­யும் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

இப்­போது கோத்­த­பா­ய­வுக்கு எதி­ராக இந்­தச் சட்­டப் பிரி­வின் கீழேயே வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. கன­டா­வில் வாழும் புலம்­பெ­யர் தமி­ழ­ரான ரோய் சமா­தா­னத்­தின் சார்­பில் உண்மை மற்­றும் நீதிக்­கான உல­கத் திட்­டம் என்­கிற அமைப்­பும் அமெ­ரிக்க சட்­டத்­துறை அமைப்பு ஒன்­றும் இணைந்து இந்த வழக்­கைத் தாக்­கல் செய்­துள்­ளன.

ரோய் சம­தா­னம் 2007ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­டார். கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் நேர­டிக் கட்­டுப்­பாட்­டின் கீழ் இருந்த பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வி­னால் கைது செய்­யப்­பட்ட அவர் உடல் ரீதி­யா­க­வும் உள ரீதி­யா­க­வும் துன்­பு­றுத்­தப்­பட்டு அவ­ரி­ட­மி­ருந்து குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது. இது தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மை­கள் குழு­வில் ரோய் தாக்­கல் செய்த வழக்­கில் அவர் வெற்­றி­பெற்­றார். எனி­னும் அவ­ருக்கு வழங்க உத்­த­ர­வி­டப்­பட்ட இழப்­பீட்டை கொழும்பு வழங்­க­வில்லை.

இந்­தப் பின்­ன­ணி­யி­லேயே கோத்­த­பாய மீது ரோய் சார்­பில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக மற்­றொரு வழக்­கும் கோத்­த­பாய மீது தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. சண்டே லீடர் பத்­தி­ரி­கை­யின் முன்­னாள் ஆசி­ரி­யர் லசந்த விக்­கி­ர­ம­துங்­க­வின் மகள் சார்­பில் அந்த வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

போர்க் குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிப்­ப­தற்கு கலப்பு நீதி­மன்­றம் ஒன்றை உரு­வாக்­கும் ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் யோச­னை­யைக் கொழும்பு அடி­யோடு நிரா­க­ரித்து விட்­ட­தன் பின்­ன­ணி­யில் இந்த வழக்கு முக்­கி­ய­மா­ன­தாக நோக்­கப்­ப­டு­கின்­றது. நீதி­யான, சுயா­தீ­ன­மான போர்க்­குற்ற விசா­ரணை ஒன்­றைக் கொழும்பு முன்­னெ­டுக்­காத பட்­சத்­தில் இனி­வ­ரும் காலங்­க­ளில் இது­போன்ற பல வழக்­கு­களை இலங்­கைப் படை­க­ளின் முன்­னாள் அதி­கா­ரி­க­ளும் இன்­றைய மூத்த அதி­கா­ரி­க­ளும் எதிர்­கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக இருப்­பார்­கள்.

அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக அமெ­ரிக்­கக் குடி­யு­ரி­மையை கோத்­த­பாய ராஜ­பக்ச துறக்­கக்­கூ­டும். அதற்கு முன்­ன­தாக அவர் மீது அமெ­ரிக்­கக் குடி­ம­கன் என்ற ரீதி­யில் வழக்­குத் தாக்­கல் செய்­வ­தற்கு இதுவே இறுதி வாய்ப்பு என்­ப­தா­லேயே வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­ட­தாக உண்மை மற்­றும் நீதிக்­கான உல­கத் திட்ட தலை­வர் யஸ்­மின் சூகா தெரி­வித்­துள்­ளார்.

போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் ஒரு தீர்வை எட்­டு­வ­தற்கு கொழும்பு தொடர்ந்து மறுத்­து­வந்­தால் இது­போன்ற வழக்­கு­கள் பல­வற்­றை­யும் அத­னது படை அதி­கா­ரி­கள் எதிர்­கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளா­கவே இருப்­பர்.

You might also like