செஞ்சிலுவை சங்க வாரத்தில்- சமூகப் பணிகள் முன்னெடுப்பு!!

உலக செஞ்சிலுவை சங்க வரை தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் மரநடுகை மற்றும் குருதித் தானம் உள்ளிட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

“மனித நேயத்தையும் சூழலையும் நேசிப்போம்“ எனும் தொனிப்பொருளில் இந்த வாரம் கொண்டாடப்பட்டது.

பளை மத்திய கல்லூரியில் மரநடுகையையும், பளை வைத்தியசாலையில் குருதித் தான நிகழ்வும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலையிலும் குருதித் தானம் வழங்கப்பட்டது.

You might also like