தமிழ் மக்­க­ளின் செல்­வாக்கை – இழக்­க­வில்லை கூட்­ட­மைப்பு!!

‘தமிழ்த் தேசி­யக் கூட்­ட ­மைப்பு தமிழ் மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்கை இழக்­க­வில்லை. நூறு வீதம் சரி­யான முடி­வு­களை எடுத்து நேரான பாதை­யில் நாம் பய­ணிக்­கின்­றோம். இது எமது மக்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும்’ இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம் -– கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப் ­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.

‘அர­சி­யல் தெரி­யாத விக்­னேஸ்­வ­ர­னைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஆக்­கி­யமை முத­லா­வது பிழை’ என­வும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு அண்­மை­யில் பய­ணம் செய்­தி­ருந்த அவர்,அந்­த­நாட்டு வானொலி ஒன்­றுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

‘நாம் 100 வீதம் எங்­கள் முடி­வு­களை சரி­யா­கச் செய்­துள்­ளோம். ஆனால், அரசு வழங்க வேண்­டி­ய­வற்றை வழங்­கா­மல் காலத்தை இழுத்­த­டிக்­கின்­றது. இது­தான் உண்மை. எம்மை விமர்­சிக்­கும் மாற்­றுக் கட்­சி­கள் திருப்­தி­க­ர­மான – ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்­வுத் திட்­டத்தை முன்­வைத்­தி­ருக்­கின்­றார்­களா?

2010ஆம் ஆண்டு நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வடக்­கில் மாற்­றுக் கட்­சி­களை எமது மக்­கள் நிரா­க­ரித்­தார்­கள். 2015ஆம் ஆண்டு தேர்­த­லி­லும் மாற்­றுக் கட்­சி­களை அவர்­கள் நிரா­க­ரித்­தார்­கள்.

வெளி­நாட்­டில் இருக்­கும் பல புலம்­பெ­யர் தமிழ் அமைப்­பு­கள் மாற்­றுக் கட்­சி­க­ளுக்­குத்­தான் ஆத­ரவு வழங்­கின. ஆனால், களத்­தில் நின்ற எமது மக்­கள், மாற்­றுக் கட்­சி­க­ளைத் தோற்­க­டித்­த­னர். இது எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் தொட­ரும்.

விக்­னேஸ்­வ­ர­னுக்கு அர­சி­யல் தெரி­யாது. அப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ரைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் ஆக்­கி­யமை முத­லா­வது பிழை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மை­தான் விக்­னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் ஆக்­கி­யது. கூட்­ட­மைப்­பில் இருந்­த­வர்­கள் பல­ரும் அதனை அன்றே எதிர்த்­தார்­கள்.

விக்­னேஸ்­வ­ரனை வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக கள­மி­றக்க கூட்­ட­மைப்­பின் தலை­மைப்­பீ­டம் முடி­வெ­டுத்­த­போது எனது பத்­தி­ரி­கை­க­ளான ‘உத­யன்’ – ‘சுடர் ஒளி’ப் பத்­தி­ரி­கை­கள் அவ­ரைப் பற்றி எழு­தின.

விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­சர் பத­விக்­குப் பொருத்­தம் இல்லை என­வும், மாவை சேனா­தி­ரா­ஜா­தான் அந்­தப் பத­விக்கு நூறு வீதம் பொருத்­தம் என­வும் செய்­தி­க­ளை­யும் ஆசி­ரி­யர் தலைப்­பு­க­ளை­யும் எனது பத்­தி­ரி­கை­கள் அன்று எழு­தின.

விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­சர் பத­வி­யில் இருந்­த­போது எவ­ரி­ன­தும் சொல்­லை­யும் கேட்­கா­மல் தான்­தோன்­றித்­த­ன­மா­கச் செயற்­பட்­டார்’ – என்­றார்.

You might also like