தோற்­க­டிக்­கப்­பட்­டது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு!!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று அறி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப். அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வொஷிங்­ட­னில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டார் அவர்.

ஈராக், சிரிய நாடு­க­ளின் சில பகு­தி­க­ளைக் கைப்­பற்­றிய அவற்­றைத் தனி­நாடு என்று அறி­வித்­தி­ருந்­தது ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக், சிரிய இஸ்­லா­மிக் ஸ்ரேட்) அமைப்பு. அந்த அமைப்­பின் பிடி­யில் இருந்து ஈராக் 2017ஆம் ஆண்டு முழு­மை­யாக விடு­விக்­கப்­பட்­டது.

சிரி­யா­வில் அந்த அமைப்பு தொடர்ந்­தும் வேரூன்­றி­யி­ருந்­தது. இத­னால் சிரி­யா­வில் ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான போரை மிகத் தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வந்­தது அமெ­ரிக்கா.

பல்­மைரா, டமஸ்­கஸ், இட்­லிப், அலெப்போ, மேற்கு அலெப்போ என்று ஒவ்­வொரு நக­ராக அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டுப்­படை மீட்டு வந்­தது. இந்த நிலை­யில் சிரி­யா­வில் இருந்­தும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முழு­மை­யா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று நேற்று அறி­வித்­தார் ட்ரம்ப்.

எனி­னும், அந்த அமைப்­பின் ஆயு­த­தா­ரி­கள் சிலர் ஆங்­காங்கே குழுக்­க­ளா­கச் செயற்­பட்டு வரு­கின்­றன. அவர்­கள் மிக­வும் வலி­மை­யா­ன­வர்­கள். அவர்­கள் மிக­மிக விரை­வில் வீழ்த்­தப்­ப­டு­வார்­கள். இன்­னும் ஒரு வாரத்­தில் சிரி­யா­வில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். வழித்­துத் துடைக்­கப்­ப­டும் என்­றும் ட்ரம்ப் குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக ட்ரம்ப் சிரி­யா­வில் இருந்து அமெ­ரிக்­கப் படை­க­ளைத் திரும்­பப் பெறும் முடிவை அறி­வித்­தி­ருந்­தார். இதற்கு பல தரப்­புக்­க­ளில் இருந்­தும் கண்­ட­னங்­கள் குவிந்­தன. இந்த நிலை­யில் தற்­போது சிரி­யா­வில் இருந்து ஐ.எஸ். முழு­மை­யா­கத் தோற்­க­டிக்­கப்­பட்­டது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

You might also like