நிலத்தடி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும்!!

சுன்­னா­கம் நிலத்­தடி தண்­ணீ­ரில் கழிவு ஒயில் கலக்­கப்­பட்­டமை தொடர்­பாக இடம்­பெற்ற வழக்­கில் உயர் நீதி­மன்­றம் வழங்­கிய தீர்ப்பு பாராட்­டுக்­கு­ரி­யது.

மின்­சார சபை­யின் ஏற்­பாட்­டில் சுன்­னா­கம் மின்­சார நிலை­யப் பகு­தி­யில் இயங்­கி­வந்த தனி­யார் நிறு­வ­னம் ஒன்று மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்து வந்­தது. இதன்­போது வெளி­யேற்­றப்­பட்ட கழிவு ஒயில் மற்­றும் ஏனைய கழி­வு­கள் நிலத்­த­டித் தண்­ணீர் கலந்து அந்த தண்­ணீ­ரைப் பயன்­ப­டுத்தி வந்த மக்­கள் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். மின்­சார நிலைய வளா­கத்­தி­னுள் குளம் போன்று கழிவு ஒயில் தேங்கி நின்­றதை அங்கு சென்­ற­வர்­கள் பார்த்­துள்­ள­னர். பின்­னர் அதைக் காண­வில்லை. நிலத்­தில் ஆழ­மா­கத் துளை­யி­யிட்டு கழிவு ஒயில் நிலத்­தி­னுள் செலுத்­தப்­பட்­ட­தால் நிலத்­தடி நீரு­டன் அது கலந்­து­விட்­டது. அண்­மித்த பகு­தி­க­ளில் அமைந்­தி­ருந்த கிண­று­க­ளில் உள்ள நீரில் கழிவு ஒயில் கலந்­தி­ருந்­தமை தெளி­வா­கத் தெரிந்­தது. இத­னால் நிலத்­தடி நீரைப் பயன்­ப­டுத்த முடி­யாது மக்­கள் சிர­மங்­க­ளுக்கு உள்­ளா­னார்­கள்.

இது தொடர்­பாக ஆரம்­பத்­தில் மல்­லா­கம் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்­டது. அங்கு குறித்த நிறு­வ­னத்­துக்கு எதி­ரா­கத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. பின்­னர் இந்த வழங்கு உயர் நீதி­மன்­றத்­தில் இடம்­பெற்­று­வந்த நிலை­யில் மல்­லா­கம் நீதி­மன்­றத்­தால் வழங்­கப்­பட்ட தீர்ப்பு உறு­தி­செய்­யப்­பட்­ட­து­டன் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு இழப்­பீடு வழங்­கு­மாறு உயர்­நீ­தி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

நொதேர்ண் பவர் நிறு­வ­னத்தை
காப்­பாற்­றி­னாரா முன்­னாள் முதல்­வர்?
இந்த விட­யத்­தில் அப்­போ­தைய வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும் விவ­சாய அமைச்­ச­ரும் நடந்­து­கொண்ட விதம் தொடர்­பா­கத் தற்­போது பெரும் சர்ச்சை எழுந்­துள்­ளது. அவர்­கள் இரு­வ­ரும் கழிவு எண்­ணெய் நிலத்­தடி நீரு­டன் கலந்த நிறு­வ­னத்­தைக் காப்­பாற்­று­கின்ற முயற்­சி­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்­றும் குற்­றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாக வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் கார­சா­ர­மான கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­துள்­ளார். முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் விவ­சாய அமைச்­ச­ரும் சேர்ந்து கழிவு ஒயில் விவ­கா­ரத்­தில் நடந்த உண்­மை­களை மூடி மறைத்­த­னர் என்று தவ­ராசா கூறி­யமை உண்­மை­யான இருக்­கு­மா­னால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் அவர்­களை ஒரு­போ­துமே மன்­னிக்க மாட்­டார்­கள்.

ஏற்­க­னவே மலத்­தொற்று மற்­றும் இர­சா­ய­னங்­க­ளின் கலப்­பால் குடா­நாட்­டின் நிலத்­தடி தண்­ணீர் பாவ­னைக்கு உத­வாத நிலைக்கு மாறி­விட்­ட­தாக அறிக்­கை­கள் வெளி­வந்த நிலை­யில் கழிவு ஒயில் விவ­கா­ரம் மேலும் மோச­மான சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கழிவு ஒயி­லால் சுன்­னா­கம் பகு­தி­யில் மட்­டு­மல்­லாது அதற்கு அப்­பால் உள்ள பகு­தி­க­ளி­லும் பாதிப்பு ஏற்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. அண்­மைய நாள்­க­ளாக நில­வி­வ­ரும் கடு­மை­யான வறட்சி கார­ண­மாக ஏழா­லைப் பகு­தி­யி­லுள்ள கிண­று­க­ளில் உள்ள தண்­ணீ­ரில் எண்­ணெய் படி­வு­க­ளைக் கண்­டோம் என்று அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த மக்­கள் பீதி­ய­டைந்­துள்­ள­னர்.

அப்­போது நிலத்­தடி நீரில் எண்­ணெய் கலக்­க­வில்­லை­யென முன்­னாள் முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்­தால் அதை­வி­டப் பெரிய தவறு எது­வுமே இருக்­காது. மேலும் அது மட்­டு­மல்­லாது கழிவு ஒயில் நீரில் கலந்­த­தால் மக்­கள் அவ­லங்­களை எதிர்­கொண்­டி­ருந்­த­போது மாகா­ண­சபை அதைப் போக்­கு­வ­தற்­கும் எதை­யும் செய்­ய­வில்லை. அது­மட்­டு­மல்­லாது நிலத்­தடி நீரில் எண்­ணெய் கலக்­க­வில்­லை­யென முத­ல­மைச்­ச­ரும் விவ­சாய அமைச்­ச­ரும் சாதித்து வந்­த­னர். குறித்த நிறு­ வ­னத்­தைக் காப்­பாற்­றும் வித­மா­கவே அவர்­கள் நடந்து கொண்­ட­னர். தற்­போது உயர்­நீ­தி­மன்­றம் இவர்­கள் கூறி­யவை யாவும் பொய்­யென்­பதை நிரூ­பித்து விட்­டது. இதற்கு விக்­னேஸ்­வ­ரன் எதைக்­கூ­றிச் சமா­ளிக்­கப்­போ­கி­றார்?

நன்மை செய்­யா­விட்­டா­லும்
தீங்கு செய்­வது எதற்­காக?
விக்­னேஸ்­வ­ரன் முத­ல­மைச்­சர் பத­வியை வகித்த வடக்கு மாகா­ண­சபை வட­ப­குதி மக்­க­ளுக்கு எதை­யுமே செய்­ய­மு­டி­யாத நிலை­யில் தனது முழு ஆயுள்­கா­லத்­தை­யும் பூர்த்தி செய்­து­விட்­டது. தற்­போது மீண்­டு­மொரு தடவை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ரு­வ­தற்­கான முயற்­சி­க­ளில் விக்­னேஸ்­வ­ரன் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார். இதற்­கா­கத் தனிக்­கட்­சி­யொன்றை அமைத்து கூட்­ட­ணி­யொன்றை அமைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளி­லும் அவர் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார். ஆனால் கழிவு ஒயில் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் அவரை இனி­மே­லும் நம்­பு­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது.

உயர்­நீ­தி­மன்­றத்­தின் உத்­த­ர­வின் பிர­கா­ரம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­க­வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது. இதன் பிர­கா­ரம் 500 குடும்­பங்­க­ளுக்­குத் தலா 40 ஆயி­ரம் ரூபா வீதம் பாதிப்பை ஏற்­ப­டுத்­திய நிறு­வ­னம் நிவா­ர­ண­மாக வழங்க வேண்­டும். ஆனால் நிவா­ர­ணம் வழங்­கு­வ­தால் மட்­டுமே கழிவு ஒயில் பிரச்­சினை ஓய்ந்­து­வி­டாது. நிலத்­தடி நீரில் கலந்­துள்ள கழிவு ஒயிலை முற்­றா­கவே அகற்றி விடு­வ­தற்­கான தொழில்­நுட்­பத்­தைப் பெற்று உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தன் ஊடா­கவே இந்­தப் பிரச்­சி­னைக்கு ஒரு நல்ல தீர்­வைக் காண முடி­யும். இதில் இனி­யும் தாம­தத்தை ஏற்­ப­டுத்­து­வது நல்­ல­தல்ல.

You might also like