நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் – தமி­ழர் திரு­விழா!!

வடக்கு கிழக்கு எனும் தமி­ழர் தாய­கத்தை துண்­டு­போ­டும் முயற்­சி­யில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள செம்­மலை நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தில் இன்று தமி­ழர் திரு­விழா பெரு­மெ­டுப்­பில் இடம்­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஏற்­பா­டு­கள் சிறப்­பான முறை­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

தமி­ழ­ரது இருப்­பைக் கேள்­விக்­குள்­ளாக்கி திணைக்­க­ளங்­க­ளின் பெய­ரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள செம்­மலை நீரா­வி­ய­டி­யில் தமி­ழர்­கள் ஒன்று கூடி தமது பலத்­தை­யும், ஆக்­கி­ர­மிப்­பின் எதிர்ப்­பை­யும் காட்ட இந்­தப் பொங்­கல் விழா­வில் ஒட்­டு­மொத்த தமி­ழர்­க­ளும் கூட வேண்­டும் என்று சமூக வலைத்­தள நண்­பர்­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்­தின் பிடி­யில் சிக்­கி­யி­ருக்­கும் தமி­ழர்­க­ளது பாரம்­ப­ரிய நிலத்­தில் இன்று காலை 108 பானை­க­ளில் பொங்­கல் விழா இடம்­பெ­ற­வுள்­ளது.

முன்­ன­தாக கொக்­குத்­தொ­டு­வாய் கோட்­டைக் கேணி பிள்­ளை­யார் ஆல­யத்­தில் இருந்து நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­துக்கு அதி­காலை 3 மணி­ய­வில் மட்­பாண்­டம் எடுத்து வரப்­பட்டு 108 பானை­யில் பொங்­கல் இடம்­பெ­ற­வுள்­ளது. சாதி, மத, அர­சி­யல், வர்க்க வேறு­பா­டு­க­ளைக் களைந்து தமி­ழர் திரு­வி­ழா­வாக அந்த விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டு­களை ஆலய அறங்­கா­வல் குழு­வி­ன­ரும், சமூக வலைத்­தள நண்­பர்­க­ளும் இணைந்து மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

முல்­லைத்­தீ­வில் பழை­மை­ய­வாய்ந்த இந்து ஆல­யங்­க­ளி்ல் ஒன்­றாக நீரா­விப்­பிட்டி பிள்­ளை­யார் ஆல­யம் காணப்­ப­டு­கி­றது. போருக்­குப் பின்­னர் ஆலய வளா­கத்­தில் பிக்கு ஒரு­வர் விகாரை ஒன்றை அமைக்க கட்­டு­மா­னங்­களை ஆரம்­பித்­தார். அது தொடர்­பான வழங்கு முல்­லைத்­தீவு நீதி­வான் மன்­றில் இடம்­பெற்று வரு­கி­றது.

பிள்­ளை­யார் ஆல­யத்தை ஆக்­கி­ர­மிக்­கும் நோக்­கில் கடந்த காலங்­க­ளில் தென்­னி­லங்­கை­யில் இருந்து வந்த பலர் பல முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர். அதி­கா­ரங்­கை­ளைப் பயன்­ப­டுத்தி தமி­ழ­ரு­டைய இருப்பை கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருந்­த­னர்.

அது தொடர்­பில் தமிழ்த் தலை­வர்­க­ளும் கடும் அதிப்­தியை வெளி­யிட்­டு­வ­ரு­கின்­ற­னர். ஆனால் தொடர்ந்­தும் அத்­து­மீ­றல்­க­ளும், அதி­கார அடக்­கு­தல்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன. செம்­மலை நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­துக்­குச் செல்­வ­தற்­கான பேருந்து ஒழுங்­கு­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

You might also like