பலாலி வானூர்­தித்­தள அபி­வி­ருத்தி -அடுத்த வாரம் ஆரம்­பம்!!

பலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாக தர­மு­யர்த்­து­வ­து­டன், தமி­ழ­கத்­துக்கு உட­ன­டி­யாக வானூர்­திச் சேவை­களை நடத்­தும் வகை­யில் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் எதிர்­வ­ரும் 14ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தரும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்­திப் பணிக்­கான அடிக்­கல்லை நட்­டு ­வைக்­க­வுள்­ளார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இரு நாள் பய­ண­மாக வடக்கு மாகா­ணத்­துக்கு எதிர்­வ­ரும் 14ஆம் திகதி வருகை தர­வுள்­ளார்.

14ஆம் திகதி காலை நல்­லூர் ஆல­யத்­துக்­குச் சென்று வழி­பா­டு­க­ளில் ஈடு­பட்ட பின்­னர், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் மீளாய்­வுக் கூட்­டத்­தில் பங்­கேற்­க­வுள்­ளார். அத­னைத் தொடர்ந்து ஜெட்­விங் விருந்­தி­னர் விடு­தி­யில் மதி­ய­போ­ச­னத்­தில் கலந்து கொள்­ள­வுள்­ளார்.

கைதடி மற்­றும் நாவற்­கு­ழி­யில் அமைக்­கப்­பட்ட பாலங்­களை நேரில் சென்று பார்­வை­யி­ட­வுள்­ளார். அத­னைத் தொடர்ந்து கோப்­பாய் பிர­தேச செய­ல­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள நிர்­வாக அலகு ஒன்றை திறந்து வைக்­க­வுள்­ளார். இந்த நிகழ்­வின் பின்­னர் பருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள நிர்­வாக அல­கைத் திறந்து வைக்­க­வுள்­ளார்.

இதன் பின்பு மயி­லிட்டி கலை­ம­கள் பாட­சா­லைக்கு அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும், அதற்கு அரு­கில் வீட­மைப்­புக்­கான அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும் பங்­கேற்­க­வுள்­ளார். இந்த நிகழ்­வு­கள் முடி­வ­டைந்த பின்­னர் காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும், அத­னைத் தொடர்ந்து பலாலி வானூர்தி நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான அடிக்­கல் நடும் நிகழ்­வி­லும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பங்­கேற்­க­வுள்­ளார்.

அன்­றைய தினம் இரவு யாழ்ப்­பாண வர்த்­த­கத் தொழிற்­து­றை­யி­ன­ரைச் சந்­தித்து அவர் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளார். மறு­நாள் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குச் செல்­ல­வுள்­ளார்.

You might also like