பாலத்தில் சிக்கிய முதலை!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் மீனவர்கள் தொழில் செய்யும் பகுதியில் முதலை ஒன்று சிக்கிக் கொண்டது.

கம்பி ஒன்றில் சிக்கிய முதலை நகரமுடியாத நிலையில் காணப்பட்டது. அதனை மீனவர்கள் மீட்டு, வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

திணைக்கள அதிகாரிகள் முதலையை மீட்டுச் சென்றனர்.

சுமார் 12 அடி நீளம் கொண்ட குறித்த முதலை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வவுனிக்குளம் முதலைகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது.

You might also like