புத்தாண்டில் கலைஞர்கள் மதிப்பளிப்பு!!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கிளிநொச்சி பளை மாசார் வளர்மதி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலைஞர்களை மதிப்பளித்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் , உபதவிசாளர் கஜன் , கிளிநொச்சி மாவட்ட உதவித் திடடமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் , பளை பொலிஸ் பொறுப்பதிகாரி , பிரதேச கலைஞர்கள், கிராம அலுவலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like