பொலிஸாரின் வாகனத்தைக் கடத்தியவர் கைது!!

0 87

யாழ்ப்பாணம் கொடிகாமம்  பொலிஸாரின் வாகனத்தைக் கடத்திய  நபர்  இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மோத­லைத் தடுக்­கச் சென்ற பொலி­ஸா­ரின் துப்­பாக்­கி­யைப் பறித்து, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரு­டன் பொலிஸ் வாக­னத்­தைக் கடத்­திய  சம்­ப­வம் ஒன்று நேற்று இரவு  யாழ்ப்­பா­ணம் கொடி­கா­மம், பாலா­விப் பகு­தி­யில் இடம்­பெற்­றது.

இந்­தச் சம்­ப­வத்­தால் சாவ­கச்­சேரி, கொடி­கா­மம்  பொலி­ஸார் பாலா­விப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்­ட­ னர். இத­னால் அங்கு பதற்­றம் ஏற்­பட்­டது. பொலி­ஸா­ரு­டைய தேடு­தல் நட­வ­டிக்­கை­க­ளும் இடம்­பெற்­றன.

கொடி­கா­மம் பாலா­விப் பகு­தி­யில் திரு­மண வீடு ஒன்­றில் குழப்­பம் ஏற்­பட்டு மோதல் இடம்­பெ­று­கி­றது என்று பொலிஸ் அவ­சர சேவை இலக்­க­மான 119க்கு தக­வல் கிடைத்­துள்­ளது.

இதன்­படி,  கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் இருந்து  ஒரு ஜீப் வண்­டி­யில் நான்கு பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்­றுள்­ள­னர்.  ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் வாக­னத்­தில் இருக்க மூன்று பேர் வாக­னத்­தில் இருந்து இறங்கி அங்கு இடம்­பெற்ற  மோத­லைத் தடுத்து மோத­லில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்ய முற்­பட்­ட­னர்.

இதன்­போது அங்கு நின்­ற­வர்­க­ளுக்­கும் பொலி­ஸா­ருக்­கும் இடை­யில் முறு­கல் நிலை ஏற்­பட்­டது. கைது நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு பொலி­ஸா­ரைக் கோரி­யுள்­ள­னர். எனி­னும் பொலி­ஸார் மோத­லில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்ய முயன்­ற­னர். அவர்­க­ளில் ஒரு­வர் பொலி­ஸா­ரைத் தாக்­கி­விட்டு, விரைந்­து சென்று நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பொலி­ஸா­ரின் ஜீப் வண்­டியை எடுத்­துக் கொண்டு சென்­றுள்­ளார்.

ஜீப் வண்­டி­யின் பின்­னால் இருந்த பொலிஸ் உத்­தி ­யோ­கத்­தர் சிறிது தூரத்­தில் அதி­லி­ருந்து குதித்து தான் வைத்­தி­ருந்த துப்­பாக்­கி­யால் மேல் வெடி வைத்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வாகனத்­தைக் கடத்­திய சம்­ப­வத்தை அடுத்து  அங்கு நின்­ற­வர்­க­ளின் மோட்­டார் சைக்­கி­ளைப் பெற்­றுக்­கொண்டு  ஜீப் வண்­டியை துரத்­திச் சென்­ற­னர் பொலி­ஸார்.

ஜீப் கடத்­தப்­பட்ட இடத்­தி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ மீற்­றர் தூரத்­தில் உள்ள பாலாவி கந்­த­சு­வாமி கோவி­ல­டி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. பொலி­ஸார் ஜீப்பை மீட்டனர். எனி­னும் அதைக் கடத்­திச் சென்­ற­வர் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

அவ­ரைக் கைது செய்ய சாவ­கச்­சேரி, கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யங்­க­ளில் இருந்து பொலி­ஸார் பறந்­த­னர்.  சம்­பவ இடத்­தில் தேடு­தல்­களை மேற்­கொண்­ட­னர். இத­னால் அங்கு நேற்று இரவு பதற்­ற­மும், பய­மும் ஏற்­பட்­டது.

இந்த நிலையில்  வாகனத்தை கடத்தியவர்  இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாலாவி தெற்கு  கொடிகாமத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like