பௌத்த, சிங்­கள பேரி­ன­வா­தத்­துக்கு மீண்­டும் ஒரு பலி!

இலங்கை மீண்­டும் ஒரு தடவை பௌத்த சிங்­கள மேலா ண்மை வாதத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நாடு பௌத்த சிங்­கள நாடு என்று வரை­ய­றுக்­கும் இந்த மேலா ண்மை, எண்­ணிக்­கை­யில் சிறு­பான்­மை­யாக இருக்­கும் தமிழ், முஸ்­லிம் மக்­கள் மீது தனது அடக்­கு­மு­றை­க­ளைக் கட்­ட­விழ்த்­து­வி­டு­வதை ஒரு­போ­தும் நிறுத்­தப்­போ­வ­தில்லை என்­பதை தற்­போது கட்­ட­விழ்ந்து வரும் சம்­ப­வங்­கள் மிகத் தெளி­வாக உணர்த்தி நிற்­கின்­றன.

கிழக்கு மற்­றும் மேற்கு மாகாண ஆளு­நர்­க­ளான ஹிஸ்புல்லா மற்­றும் அசாத் சாலி ஆகி­யோ­ரும் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீ­னும் பதவி நீக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யுத்தி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் ஜாதிக ஹெலெ உறு­மய கட்­சி­யின் மூத்த தலை­வ­ரு­மான வண. அத்­து­ர­லியே ரத்ன தேரர் தொடங்­கிய பட்­டி­னிப் போராட்­டத்­து­டன் இலங்­கை­யில் மீண்­டும் ஒரு தடவை பௌத்த, சிங்­கள மேலாண்­மை­வா­தம் தன்னை வெகு ஆணித்­த­ர­மாக வெளிப்­ப­டுத்­தி­யது.

அவ­ரது போராட்­ட­மும் அதற்கு வண. ஞான­சார தேரர் தலை­மை­யி­லான ஹெலெ உறு­மய போன்ற அடிப்­ப­டை­வாத பௌத்த அமைப்­பு­க­ளும் கொடுத்த அழுத்­தம் முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­கள் மூவ­ரை­யும் மட்­டு­மல்ல, அர­சில் பத­வி­யில் உள் ள முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­கள் அனை­வ­ரை­யுமே வெளி­யேற்றி இருக்­கி­றது.

தேர­ரின் பட்­டி­னிப் போராட்­டம் மற்­றும் அதற்கு ஆத­ர­வா­கப் பிக்­கு­க­ளும் சிங்­க­ள­வர்­க­ளும் மேற்­கொண்ட பேர­ணி­கள், ஆர்ப்­பாட்­டங்­கள், போராட்­டங்­க­ளைத் தொடர்ந்து ஆட்­சி­யில் பங்­கா­ளி­க­ளாக இருக்­கும் முஸ்­லிம் அமைச்­சர்­கள், பிரதி அமைச்­சர்­கள், நிழல் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் பதவி வில­கு­கின்­ற­னர் என்­கிற அறி­விப்பை முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வர் ரவூப் ஹக்கீம் நேற்று விடுத்­தார். எனி­னும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்­கான தமது ஆத­ரவு தொட­ரும் என்­றும் அவர் அறி­வித்­தார்.

பத­வி­யில் இருந்த முஸ்­லிம் ஆளு­நர்­கள் மற்­றும் அமைச்­சர் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­கள் தெரி­விக்­கப்­பட்­டா­லும் அவர்­கள் மீது பொலி­ஸார் எந்­த­வி­த­மான குற்­றப்­பத்­தி­ ரங்­க­ளை­யும் முன்­வைக்­காத நிலை­யில் அல்­லது அப்­ப­டிக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­ப­தற்­கான ஆத­ரங்­க­ளைப் பொலி­ஸா­ரால் திரட்ட முடி­யாத நிலை­யில் அவர்­கள் பத­வி­யி­லி­ருந்து நீங்­கி­யி­ருக்­கி­றார்­கள் என்­றால், அது பௌத்த சிங்­க­ளப் பேரி­ன­வா­தத்­தின் நிகழ்ச்சி நிர­லுக்கு அவர்­கள் பலிக்­க­டாக்­க­ளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­தையே அப்­பட்­ட­மாக வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தற்­கொ­லைக் குண்­டு­வெ­டிப்­புக்­க­ளைத் தொடர்ந்து ஏற்­பட்ட களச்­சூ­ழல் பௌத்த, சிங்­க­ளப் பேரி­ன­வாத நிகழ்ச்சி நிர­லின் கீழேயே முன்­னெ­டுக்­கப்­ப­டும் என்­ப­தை­யும் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் அது குறித்து அவ­தா­னத்­து­ட­னும் விழிப்­பு­ட­னும் இருக்­க­வேண்­டும் என்­ப­தை­யும் இந்­தப் பத்தி தொடக்­கத்­தி­லேயே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. இன்று அது முற்­றி­லும் உண்மை என்­பதை கட்­ட­விழ்ந்­து­வ­ரும் தொட­ரான சம்­பங்­கள் வெட்­ட­வெ­ளிச்­ச­மாக்­கு­கின்­றன.

இன்று இந்த முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­கள் மூவ­ரும் பௌத்த, சிங்­கள பேரி­ன­வாத நிகழ்ச்சி நிர­லால் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­றால் அதற்கு ஒரே­யொரு கார­ணம்­தான் இருக்க முடி­யும். அது, அவர்­கள் எல்­லை­க­ளைக் கடந்து, தமது அர­சி­ய­லுக்­காக என்­றா­லும் தமது இன மக்­க­ளுக்­காக மட்­டுமே இயங்­கி­னார்­கள் என்­ப­து­தான். அவர்­க­ளுக்கு மத்­திய கிழக்கு நாடு­க­ளில் இருந்து பெரு­ம­ளவு நிதி­யைத் தரு­வித்து அபி­வி­ருத்­தி­யைச் செய்­து­கொ­டுத்­தார்­கள் கொழும்பை மட்­டும் நம்­பி­யி­ருக்­கா­மல் என்­ப­து­தான் பேரி­ன­வா­தத்­தின் கண்­க­ளைக் குத்­திய விவ­கா­ரம்.

முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­கள் சிங்­க­ளத்துக்­கு ஏவல் செய்து கொண்டு அது கொடுப்­பதை மட்­டும் பெற்­றுக்­கொண்டு இருக்­கும் வரை பிரச்­சினை இல்லை. அதைத் தாண்ட முற்­ப­டும்­போது அவர்­கள் இலக்கு வைக்­கப்­ப­டு­வார்­கள், தூக்கி எறி­யப்­ப­டு­வார்­கள்.

தமிழ், முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­க­ளில் தமது இனத்­துக்­கா­கச் சிந்­திக்­கும், செயற்­ப­டும் எவ­ராக இருந்­தா­லும் அவர்­களை அழித்­தொ­ழிப்­ப­தில் பௌத்த, சிங்­கள நிகழ்ச்சி நிரல் மிக உறு­தி­யா­க­வும் தெளி­வா­க­வும் இருக்­கும். அது பிர­பா­க­ர­னும் விடு­த­லைப் புலி­க­ளாக இருந்­தா­லும் சரி வேறு யாராக இருந்­தா­லும் சரி அவர்­களை அழிப்­ப­தில் அந்த நிகழ்ச்சி நிரல் கண்­ணும் கருத்­து­மாக இருக்­கும்.

இதை எதிர்­கொள்­வ­தற்­கான ஒரே வழி தமிழ், முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­கள் தமக்­குள் ஒன்­றி­ணை­வ­தும் சிங்­கள முற்­போக்­குச் சக்­தி­க­ளு­டன் இணைந்­து­கொண்டு இரு முதன்­மைச் சிங்­க­ளக் கட்­சி­க­ளுக்­கும் சவால்­வி­டக்­கூ­டிய மூன்­றா­வது அணி ஒன்றை உரு­வாக்­கு­வ­தும்­தான். நடை­மு­றை­யில் கடி­ன­மான இந்­தப் பணியை ஏற்­றுக்­கொண்டு முன்­ன­கர்­வ­தற்கு தமிழ், சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளின் குறு­கிய அர­சி­யல் இடங்­கொ­டுக்­காது என்­கிற உண்­மை­யைப் போன்றே அப்­படி ஒன்­றி­ணை­யா­து­விட்­டால் மாறி மாறி பௌத்த, சிங்­கள பேரி­ன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு இவர்­கள் பலி­யா­க­வேண்­டி­ய­தும் யதார்த்­தம்.

You might also like