மஜிக் செய்ய முயன்றவர்- ஆற்றில் மூழ்கிய பரிதாபம்!!

கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில், கங்கை நதியில் குதித்து, மீண்டு வரும் ‘மஜிக்’ செய்ய முயன்றவர், ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்தச் சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது.

மஜிக் நிபுணர், சான்சல் லஹிரி, கோல்கட்டாவின் ஹவுரா பாலத்தின் கீழ் உள்ள கங்கை நதியில், ஒரு படகில் ஏறிக் கொண்டார். அவரது கைகளும், கால்களும், சங்கிலியால் கட்டப்பட்டன. அவர், கூண்டுக்குள் அடைத்து, பூட்டப்பட்டார்.

பாலத்தில் நின்றிருந்த, ‘கிரேன்’ லஹிரி அடைக்கப்பட்ட கூண்டை, துாக்கிச் சென்று, கங்கை ஆற்றின் நடுவே தண்ணீருக்குள் போட்டது. மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். கை, கால்கள் கட்டப்பட்டதை அவிழ்த்துக் கொண்டு, தண்ணீருக்குள் இருந்து, லஹிரி மீண்டு வரும் காட்சியை காண, திகிலுடன் காத்திருந்தனர்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும், லஹிரி, மீண்டு வரவில்லை. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். பேரிடர் மீட்புப்படை வீரர்கள், கங்கை ஆற்றில் குதித்து, லஹிரியை தேடத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like