மர்மப் பொதியால் பதற்றமடைந்த மக்கள்- இராணுவத்தினர் தீவிர சோதனை!!

வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்ம பொதியொன்று காணப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலமை காணப்பட்டது.

பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதி ஒன்று காணப்படுவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மர்மப் பொதியைச் சோதனையிட்டனர்.

இதனால் அப்பகுதி வீதிகள் மூடப்பட்டு, இராணுவத்தினரால் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனைக்குட்படுத்தப்பட்ட மர்ம பொதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்து நான்கு கூரிய வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like