மலை­யக மக்­க­ளின் அவ­லத்­துக்கு – அனைத்து அர­சு­க­ளுமே கார­ணம்!!

மலை­யக மக்­க­ளின் பொரு­ளா­தார பின்­தங்­கிய நிலை­யில் இருக்க இந்த நாட்­டில் பத­வி­யில் இருந்த அனைத்து அர­சு­க­ளும் கார­ணம் என்று தெரி­வித்­தார் நீதி மற்­றும் வெகு­சன ஊட­கத்­துறை அமைச்­சர் மங்­கள சம­ர­வீர.

மலை­நாட்டு புதிய கிரா­மங்­கள் அபி­வி­ருத்தி அதி­கா­ர­ ச­பை­யின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு நேற்று வியா­ழக் ­கி­ழமை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கா­ர்த்தமண்­ட­பத்­தில் இடம்­பெற்­றது. நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எமது நாட்­டின் தேசிய உற்­பத்­தி­யில் முன்­னிலை வகிக்­கும் தேயிலை தொழிற்­து­றை­யா­னது பொரு­ளா­தா­ரத்­தில் நேர­டி­யாக செல்­வாக்கு செலுத்­து­கின்­றது. ஆனால் பெருந்­தோட்­டப்­புற மக்­க­ளின் பொரு­ளா­தார நிலை­யா­னது மூன்­றாம் மட்­டத்­தி­லேயே காணப்­ப­டு­கின்­றது. இதற்கு பல்­வேறு கார­ணி­கள் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. குறிப்­பாக அர­சின் சில செயற்­பா­டு­க­ளை­யும் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

தோட்­டப்­புற மக்­க­ளின் பின்­தங்­கிய நில­மைக்கு ஒரு குறிப்­பிட்ட காலத்­தில் ஆட்சி செலுத்­திய அரசை மாத்­தி­ரம் குற்­றம் சுமத்த முடி­யாது. இந்த நாட்­டில் பத­வி­யில் இருந்த அனைத்து அர­சு­க­ளும் இந்த நில­மைக்கு பொறுப்­புக்­கூற வேண்­டும்.

பெருந்­தோட்ட பிர­தே­சங்­க­ளில் கல்­வித்­துறை இன்று ஏனைய மக்­க­ளு­டன் போட்­டி­யி­டும் அள­வுக்கு முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. பொரு­ளா­தா­ரத்­தில் பின்­தங்­கிய நிலை­யில் காணப்­பட்­டா­லும் கல்­வித்­து­றை­யில் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது.

அர­சும் ஏனைய தொழிற்­து­றை­யி­ன­ருக்கு வழங்­கு­கின்ற சலு­கை­களை மலை­யக மக்­க­ளுக்­கும் பெற்­றுக்­கொள்ள வேண்­டும். தேசிய ரீதி­யில் இன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற கம்­பெ­ர­லிய செயற்­திட்­டம், கிரா­மிய சக்தி செயற்­திட்­டம் ஆகி­ய­வற்­றில் மலை­யக மக்­க­ளும் உள்­வாங்­கப்­பட வேண்­டும் – என்­றார்.

You might also like