மாங்குளத்தில் கடுங்காற்று- 11 வீடுகள் சேதம்!!

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று மாலை திடீரென வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வீதியோரங்களில் நின்ற மரங்கள் பல முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்தும் சிறிது நேரம் தடைப்பட்டது.

மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும், தச்சடம்பன் பகுதியில் ஒரு வீடும், புலுமச்சிநாதகுளம் பகுதியில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like