மாஞ்சோலை மருத்துவமனை குறைபாடுகளை ஆராய்ந்தார் ஆளுநர்!!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வடமாகாண ஆளுநர் சுரோன் ராககவன் நேற்று மாலை திடீர்பயணம் மேற்கொண்டார்.

மாஞ்சோலையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உள்ள நிர்வாக மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து மக்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்ற ஆளுநர் அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்தார்.

You might also like