மாலி­யில் துருப்­புக்­காவி மீது -கண்­ணி­வெடித் தாக்­கு­தல்!!

மேற்கு ஆபி­ரிக்க நாடான மாலி­யில் ஐ.நா. அமை­திப்­ப­டை­யில் பணி­யாற்­றும் இரா­ணுவ வாக­னத் தொட­ரணி கண்­ணி­வெ­டி­யில் சிக்­கி­ய­தில், துருப்­புக்­கா­வி­யில் பய­ணம் செய்த இரண்டு இலங்கை இரா­ணுவ அதி­கா­ரி­கள் கொல்­லப்­பட்­ட­னர். மூன்று பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

மாலி­யில் ஐ.நா. அமை­திப்­ப­டை­யி­ன­ருக்­கான விநி­யோக வழித்­து­ணைப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்ள இரா­ணுவ அணி மீது, நேற்­றுக் காலை 6.30 மணி­ய­ள­வில் கண்­ணி­வெ­டித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

மாலி­யின் மத்­திய பகு­தி­யில் உள்ள டோன்ற்சா என்ற இடத்­தில், சுற்­றுக்­கா­வல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு விட்­டுத் திரும்­பிக் கொண்­டி­ருந்த போதே, இரா­ணுவ அணி தாக்­கு­த­லில் சிக்­கி­யது. துருப்­புக்­காவி கவ­ச­வா­க­னம் முற்­றி­லும் சேத­ம­டைந்­தது. அதற்­குப் பின்­னால் சென்ற மற்­றொரு வாக­ன­மும் சேத­முற்­றது.

இந்­தத் தாக்­கு­த­லில் துருப்­புக்­காவி கவ­ச­வா­க­னத்­தில் பய­ணம் செய்த இரா­ணு­வத்­தின் 11 ஆவது இலகு காலாட்­ப­டை­யைச் சேர்ந்த கப்­டன் ஜெய­விக்­ரம, 1ஆவது இயந்­திர காலாட்­ப­டை­யைச் சேர்ந்த கோப்­ரல் விஜே­கு­மார ஆகி­யோர் உயி­ரி­ழந்­த­னர்.

பொறி­யி­யல் படைப்­பி­ரி­வைச் சேர்ந்த கோப்­ரல் குமா­ர­சிங்க, லான்ஸ் கோப்­ரல் புஷ;பகு­மார, லான்ஸ் கோப்­ரல் சந்­தி­ர­சே­கர ஆகி­யோர் படு­கா­யம் அடைந்­த­னர்.

உயி­ரி­ழந்த படை­யி­ன­ரின் சட­லங்­கள் விரை­வில் கொழும்­புக்கு கொண்டு வரப்­ப­டும் என்று இரா­ணு­வப் பேச்­சா­ளர் பிரி­கே­டி­யர் சுமித் அத்­த­பத்து தெரி­வித்­துள்­ளார்.

You might also like