மீண்டும் அதிகரித்தன- எரிபொருள் விலைகள்!!

0 128

பெற்­றோல் மற்­றும் டீச­லின் விலை நேற்று நள்­ளி­ரவு முதல் மீண்­டும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 92 ஒக்­ரேன் பெற்­றோ­லின் விலை 123 ரூபா­வி­லி­ருந்து 6 ரூபா அதி­க­ரிக்­கப்­பட்டு 129 ரூபா­வா­க­வும், 95 ஒக்­ரேன் பெற்­றோ­லின் விலை 147 ரூபா­வி­லி­ருந்து 5 ரூபா அதி­க­ரிக்­கப்­பட்டு 152 ரூபா­வா­க­வும், ஓட்டோ டீசல் 99 ரூபா­வி­லி­ருந்து 4 ரூபா அதி­க­ரிக்­கப்­பட்டு 103 ரூபா­வா­க­வும், சுப்­பர் டீசல் 118 ரூபா­வி­லி­ருந்து 8 ரூபா அதி­க­ரிக்­கப்­பட்டு 126 ரூபா­வா­க­வும் விற்­பனை செய்­யப்­ப­ட­வுள்­ளன.

எரி­பொ­ருள் விலைச் சூத்­தி­ரம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர்தொடர்ச்­சி­யாக எரி­பொ­ருள் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டது. ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி அர­சி­யல் சதி­மூ­லம் ஆட்­சிக்கு வந்த மகிந்த அரசு எரி­பொ­ருள் விலையை மூன்று கட்­ட­மா­கக் குறைத்­தது. டிசெம்­பர் மாதம் 16ஆம் திகதி மீண்­டும் பத­வி­யேற்ற ரணில் அரசு, இரண்டு தட­வை­கள் எரி­பொ­ருள் விலை­யைக் குறைத்­தி­ருந்­தது. இந்த நிலை­யில் நேற்­றைய தினம் எரி­பொ­ருள் விலை மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது.

You might also like