முஸ்­லிம்­க­ளின் உத­வி­யின்றி- தமி­ழ­ருக்­குத் தீர்வு கிட்­டாது- ஹரீஸ் எம்.பி.!!

முஸ்­லிம்­க­ளின் உத­வி­கள் இன்றி தமி­ழர்­க­ளுக்­குத் தீர்வு கிட்­டாது என்று தெரி­வித்­தார் முன்­னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம்.எம்.ஹரீஸ். கல்­முனை மாந­க­ரம் முஸ்­லிம்­க­ளின் தாய­கம் அதை யாருக்­கா­க­வும் விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது – என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

கல்­முனை பிர­தேச செய­லக பிரி­வில் வசிக்­கும் சமுர்த்திப் பய­னா­ளி­க­ளுக்கு உரித்­துப் பத்­தி­ரம் வழங்­கும் நிகழ்வு சாய்ந்­த­ம­ருது தனி­யார் மண்­ட­பத்­தில் இடம்­பெற்­றது.

இந்த நிகழ்­வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

ஸஹ்­ரான் எனும் சிறிய குழு­வி­னர் செய்த தாக்­குத்­த­லின் பின்­ன­ராக அண்­மைய காலங்­க­ளில் எமது மக்­க­ளின் மீது நடக்­கும் அநீ­தி­கள் மன­வே­த­னை­யாக உள்­ளது. ஹபாயா, ஹிஜாப் அணி­வ­தில் எமது பெண்­க­ளுக்கு வந்த சிக்­கலை முஸ்­லிம் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாங்­கள் போராடி வெற்றி பெற்­றோம்.

எமது அமைச்­சர்­க­ளில் ஒரு­வ­ரான ரிசாத்­தை­யும் முஸ்­லிம் ஆளு­நர்­க­ளை­யும் குறி­வைத்து அத்­து­ர­லிய தேரர் இருந்த உண­வொ­றுப்பு மூன்று நாள்­கள் கொழுந்­து­விட்டு எரிந்து கொண்­டி­ருந்­தது. அது நாட்­டுக்கு பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தால் நாம் எல்­லோ­ரை­யும் ஒன்று திரட்டி 9 அமைச்­சர்­க­ளை­யும் பதவி வில­க­வைத்து நாட்­டைப் பாது­காத்­தோம். இல்­லாது போனால் இந்த நாடு இன­வா­தத்­தில் தீக்­கீ­ரை­யாகி இருக்­கும்.

இப்­போது எமது பிரச்­சி­னை­களை அரசு தீர்த்து வைக்க முன்­வ­ரு­கி­றது. அரச தலை­வர் தேர்­தலை நாம் எதிர்­கொள்ள வேண்­டிய நிலை உள்ள இந்த கால­கட்­டத்­தில் எமது இருப்­புக்கு பாரிய சவால் இருக்­கி­றது.

எம்.எஸ்.காரி­யப்­பர், எம்.சி.அஹ­மத், ஏ.ஆர்.எம்.மன்­சூர், தலை­வர் அஷ்­ரப், போன்­றோர்­கள் கல்­மு­னையை மாவட்ட காரி­யா­ல­யங்­கள், வர்த்­தக நிலை­யங்­கள் அடங்­கிய முக்­கிய நக­ர­மாக மாற்­றி­ய­மைத்­த­வர்­கள். கல்­மு­னையை செதுக்­கி­யத்­தில் முஸ்­லிங்­க­ளின் பங்கு அளப்­பெ­ரி­யது. இதனை அறி­யா­மல் தமிழ் முஸ்­லிம் உறவை சீர­ழித்து கல்­மு­னையை கூறு­போட மூன்­றாம் தரப்­பின் உத­வி­யு­டன் உண­வொ­றுப்­பில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

வெளி­மா­வட்ட அர­சி­யல் தலை­வர்­கள் இதனை வழி­ந­டத்­திச் செல்­கி­றார்­கள். அர­சுக்­கும், அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­மை­க­ளுக்­கும் ஒரு செய்­தியை கூறி­யுள்­ளோம். கல்­முனை பிரிப்­ப­தாக இருந்­தால் ஆங்­கி­லே­ய­ரின் ஆட்சி காலத்­தில் இருந்­தது போல பிரி­யுங்­கள்.

கிளி­நொச்சி, யாழ், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, போன்ற பல நக­ரங்­கள் தமிழ் மக்­க­ளின் முக்­கிய நக­ரங்­க­ளாக இருக்­கி­றது. ஆனால் கல்­முனை மாந­க­ரம் முஸ்­லிங்­க­ளின் தாய­கம் அதை யாருக்­கா­க­வும் விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. தமிழ் தலை­மை­கள் நியா­ய­மில்­லா­மல் நடக்­கி­றார்­கள், அவர்­கள் இதன் பின்­வி­ளை­வு­களை சிந்­திக்க வேண்­டும். யாழில் வைத்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் தழு­த­ழுத்த குர­லில் ‘தமி­ழர்­க­ளின் தீர்வு திட்­டம் மழுங்­க­டிக்­கப்­ப­டு­கி­றது, அரசு ஏமாற்­று­கி­றது என்று பேசி­னார்’

தமிழ் மக்­க­ளின் போராட்­டத்­தின் நியா­யங்­களை உணர்ந்து அவர்­க­ளு­டன் கைகோ­ருக்க வேண்­டிய உணர்வு முஸ்­லிம்­க­ளுக்கு இருந்­தது. எங்­க­ளின் நியா­யத்தை மறுக்­கும்­போது எங்­க­ளின் பாணி­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­வ­ரும். ஒரு கையால் தட்டி சத்­தம் வராது. இரு கைக­ளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்­டும். முஸ்­லிம்­க­ளின் உதவி இல்­லா­மல் தமி­ழர்­க­ளின் தீர்வு திட்­டங்­கள் ஒரு­போ­தும் நடக்­காது – என்­றார்.

You might also like