வடக்கில் இராணுவம் தொடந்து இருக்கும்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

0 121

வடக்கில் முழுமையான படை விலக்கல் என்பது சாத்தியமல்ல. இராணுவத்தினரால் அச்சுறுத்தல் என மக்கள் உணர்ந்தால் அவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே இந்தப் பிரச்சினைக்குச் சாத்தியமான தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன.

அவர் தெரிவித்துள்ளதாவது:
தேசிய பாதுகாப்பு, ஏல்லைக் கட்டுப்பாட்டுக் காரணங்களால் முப்படைகள் மற்றும் பொலிஸாரைத் தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்க முடியாது.

இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பிரதேச மக்கள் உணர்வார்களாக இருந்தால், அரசு சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு முடிவுக்கு வரும்.

அவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே இந்தப் பிரச்சினைக்குச் சாத்தியமான தீர்வாக இருக்கும்.

ஆனால் தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு இப்போது குறிப்பிட்ட இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ, வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாது.
பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்துக் கலந்துரையாடி, அரசு பரிந்துரை ஒன்றை முன்வைக்க வெண்டும். எதிர்காலத்தில் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்துவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில் வடக்கில் படை விலக்கல் தொடர்பாக அரசியல் ரீதியான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் அண்மையில் தெரிவித்திருந்தார். அது தொடர்பாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

You might also like