வட்டுவாகல் பாலம் ஆபத்தில்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று பெருமையை எடுத்துக்கூறும் வட்டுவாகல் பாலம் வெடித்த நிலையில் காணப்படுவதால் வீதியால் செல்லும் பயணிகள் பல அசௌகரியங்களi எதிர்கொண்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னரும் பாலம் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை.

இந்தப் பாலத்தின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்பட்டு சீர்செய்யப்பட்ட நிலையில் தற்போது பாலத்தின் நடுப்பகுதியில் உடைப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலத்தினை நம்பி பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வீச்சுவலை கொண்டு றால்,நண்டு போன்ற கடல் உணவுகளை பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இதன் ஊடாக செல்லும் போது மேலும் உடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like