வர்த்தக நிலையத்தில் தீ- சம்பவ இடத்தில் ட்ரோன் கமரா மீட்பு!!

வவுனியா கடை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்தால் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் அழிவடைந்தன.

தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் அப்பகுதியில் நின்றிருந்தவர்களின் முயற்சியினால் தீ கட்டுப்பாட்டக்குள் கொண்டு வரப்பட்டதுடன், ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

இதேவளை விபத்து இடம்பெற்ற வர்த்தக நிலையத்தில் இருந்து ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கே தீவிபத்துக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில் இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like