வறட்­சிப் பாதிப்பு- வடக்கு மாகாணம் முத­லி­டம்!!

வடக்கு மாகா­ணத்­தில் வெய்யி­லின் கொடுமை மக்­களை வாட்டி வதைக்­கி­றது. இலங்­கை­யி­லேயே வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்ட மாகா­ணங்­க­ளில் வடக்கு மாகா­ணமே முத­லி­டத்­தில் உள்­ளது என்­கி­றது புள்­ளி­வி­வ­ரம்.

வடக்­கின் யாழ்ப்­பா­ணம், வவு­னியா, மன்­னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளும் வெயி­லால் கடு­மை­யான பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்­ளன.

ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் 57 ஆயி­ரத்து 473 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஒரு லட்­சத்து 93 ஆயி­ரத்து 170 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் குறிப்­பிட்­டுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெடுந்­தீ­வில் ஆயி­ரத்து 31 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 71 பேரும், வேல­ணை­யில் 2 ஆயி­ரத்து 798 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 642 பேரும், ஊர்­கா­வற்­று­றை­யில் 2 ஆயி­ரத்து 422 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 7 ஆயி­ரத்து 848 பேரும் காரை­ந­க­ரில் 2 ஆயி­ரத்து 760 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 8 ஆயி­ரத்து 297 பேரும், மரு­தங்­கே­ணி­யில் ஆயி­ரத்து 60 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 630 பேரும், சாவச்­சே­ரி­யில் 3 ஆயி­ரத்து 361 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 11 ஆயி­ரத்து 484 பேரும், கர­வெட்­டி­யில் 336 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 64 பேரும், சங்­கா­னை­யில், 6 ஆயி­ரத்து 267 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 21 ஆயி­ரத்து 206 பேரும், சண்­டி­லிப்­பா­யில் ஆயி­ரத்து 41 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 345 பேரும் பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர்.

இதைத் தவிர காரை­ந­க­ரில் கடும் காற்­றுக் கார­ண­மாக இரண்டு குடும்­பங்­க­ளைச் சேர்ந்த எட்­டுப்­பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மீன­வர்­கள் இரு­வர் அங்கு காணா­மல் போயுள்­ள­னர்.

வவு­னி­யா­வில் வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட 39 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 105 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மன்­னார் மாவட்­டத்­தில் நானாட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வில் 2 ஆயி­ரத்து 400 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 7 ஆயி­ரத்து 941 பேரும், முச­லி­யில் 3 ஆயி­ரத்து 722 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 14 ஆயி­ரத்து 627 பேரும், மாந்தை மேற்­கில் 5 ஆயி­ரத்து 808 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 20 ஆயி­ரத்து 730 பேரும், மன்­னார் நக­ரத்­தில் வறட்­சி­யால் 2 ஆயி­ரத்து 45 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 6 ஆயி­ரத்து 460 பேரும், மடு­வில் 4 ஆயி­ரத்து 99 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 13 ஆயி­ரத்து 349 பேர் என மாவட்­டத்­தில் 18 ஆயி­ரத்து 74 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 63 ஆயி­ரத்து 115 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதே­போன்று கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கண்­டா­வ­ளைப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் 322 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 185 பேரும், பூந­க­ரி­யில் 3 ஆயி­ரத்து 274 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 11 ஆயி­ரத்து 41 பேரும், கரைச்­சி­யில் ஆயி­ரத்து 920 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 7 ஆயி­ரத்து 36 பேரு­மென மாவட்­டத்­தில் மொத்­தம் 5 ஆயி­ரத்து 516 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 19 ஆயி­ரத்து 262 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

முல்­லைத்­தீ­வில் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லர் பிரி­வில் ஆயி­ரத்து 967 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 6 ஆயி­ரத்து 296 பேரும், கரை­து­ரைப் பற்­றுப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வில் 10 ஆயி­ரத்து 799 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 33 ஆயி­ரத்து 797 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மாவட்­டத்­தில் மொத்­த­மாக 12 ஆயி­ரத்து 766 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 40 ஆயி­ரத்து 93 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்­வாறு வடக்கு மாகா­ணத்­தில் மொத்­த­மாக 57ஆயி­ரத்து 473 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஒரு லட்­சத்து 93 ஆயி­ரத்து 170 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

You might also like