வவுணதீவு சம்பவம்- வெளிவந்த புதிய தகவல்!!

மாவீ­ரர் நாள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வதைத் தடுத்­த­மை­யா­லேயே மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீ­வில் இரண்டு பொலிஸ் உத்­தி­யோ­கத்­­தர் கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­டுள் ள­னர் என்று சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளது.

கொழும்பு, பத்­த­ர­முல்­லை­யில் அமைந்­துள்ள சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரோகித்த அபே­கு­ண­வர்ன மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-

மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீ­வில் பொலிஸ் அதி­கா­ரி­கள் இரு­வர் சுட்­டுப்­ப­டு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­னர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கப் பத்­தி­ரி­கை­யொன்­றில் செய்தி வெளி­வந்­துள்­ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திக­தி­யி­லி­ருந்து 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்­கில் பட்­டாசு கொளுத்­து­வ­தற்கே மக்­கள் அஞ்­சி­னார்­கள். 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 9 ஆம் திக­திக்கு பிறகு வடக்­கில் பயங்­க­ர­வா­தம் தலை­தூக்க ஆரம்­பித்­தது.

ஆவா குழு முளைத்­தது. தமிழ் வர்த்­த­கர்­கள் தாக்­கப்­பட்­ட­னர். புலி­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. வடக்­கில் தேசி­யக்­கொ­டியை ஏற்­ற­மு­டி­யாது என்று மாகாண அமைச்­ச­ரொ­ரு­வர் அறி­விப்பு விடுத்­தார். அண்­மை­யில் புலி­கள் மீண்­டும் வர­வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா கூறி­யி­ருந்­தார்.

மாவீ­ரர் தினம் நினை­வு­கூ­ரப்­ப­டு­வதை இம்­முறை பொலி­சார் தடுத்­த­னர். அதற்­கான பழி­வாங்­கல் நட­வ­டிக்­கை­யா­கவே புலி ஆத­ர­வா­ளர்­க­ளால் பொலிஸ் அதி­கா­ரி­கள் இரு­வர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சியே புலி­கள் உரு­வா­வ­தற்­கான களத்தை அமைத்­துக் கொடுத்­தது. யாழ்ப்­பாண நூல­கம் எரிப்பு உள்­ளிட்ட சம்­ப­வங்­க­ளா­லேயே புலி­கள் உரு­வா­கி­னர். பிர­பா­க­ர­னால் ஆயு­தம் மூலம் பெற­மு­டி­யா­மல் போனதை பேனை­மூ­லம் பெறு­வ­தற்கு சுமந்­தி­ரன் முற்­ப­டு­கின்­றார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிக்கு வரு­வ­தற்­காக தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு நிபந்­தனை அடிப்­ப­டை­யில் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளது.

இந்த நிபந்­த­னை­கள் மீண்­டும் புலி­கள் உரு­வா­கு­வ­தற்கு பின்­பு­ல­மாக அமை­யும்;. கூட்­டாட்சி முறையை உள்­ள­டக்­கிய அர­ச­மைப்பு, வடக்கு கிழக்­கில் எந்­த­வொரு செயற்­பா­டு­க­ளை­யும் கூட்­ட­மைப்­பி­ன­ரின் அனு­ம­தி­யில்­லாது செய்­யக்­கூ­டாது, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை நீக்­க­வேண்­டும், காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பில் விரை­வாக கண்­ட­றிய வேண்­டும் என்று பல நிபந்­த­னை­களை கூட்­ட­மைப்­பி­னர் முன்­வைத்­துள்­ள­னர் – என்­றார்.

இதே­வேளை, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை எதிர்ப்­புத் தெரி­விக்­கும் நீங்­கள், கருணா அம்­ம­னை­யும் (விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரன்) பிள்­ளை­யா­னை­யும் (சிவ­னே­சத்­துரை சந்­தி­ரக்­காந்­தன்) ஏற்­றுக்­கொண்­டுள்­ளீர்­களே என்று வின­வப்­பட்­ட­மைக்கு கருணா அம்­ம­னும், பிள்­ளை­யா­னும் தமி­ழீழ விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான போரின் வெற்­றிக்கு பிர­தான கார­ண­மாக இருந்­த­னர். இவர்­கள் இரு­வ­ரும் தீவி­ர­வா­தத்தை விட்டு ஜன­நா­ய­கத்தை ஏற்­றுக்­கொண்­ட­வர்­கள் – என்­றார்.

You might also like