வாள்களுடன் சிக்கிய நபர்கள்- மானிப்பாயில் பரபரப்பு!!

பல்­வேறு வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் தொடர்­பாக நேற்று அதி­காலை மானிப்­பா­யில் 8 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

3 வாள்­கள், இரு உந்­து­ரு­ளி­கள், சுழி­யோ­டி­கள் பயன்­ப­டுத்­தும் முகக் கண்­ணா­டி­கள் என்­ப­வை­யும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அண்­மைய நாள்­க­ளில் மானிப்­பா­யில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தி­ருந்­தன.

அதை­ய­டுத்து வடக்கு மாகாண மூத்­தப் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் ரொசான் பெர்­ணான்டோ சிறப்­புக் கவ­னம் எடுத்­தி­ருந்­தார்.

குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­வ­தற்­கான சிறப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ளப்­பட்­டி­ருந்­தன.

புத்­தாண்டு விடு­மு­றை­க­ளை­யும் தவிர்த்­துப் பொலி­ஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின் தொடர்ச்­சி­யாக நேற்­றுச் சந்­தே­ந­பர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் அலை­பே­சி­க­ளில் இருந்து ஏரா­ள­மான ஒளிப்­ப­டங்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. வாள்­க­ளு­டன் பல பேரின் ஒளிப்­ப­டங்­க­ளும், பெயர்­கள் பொறிக்­கப்­பட்ட வாள்­க­ளின் ஒளிப்­ப­டங்­க­ளும் கிடைத்­துள்­ளன என்று தெரி­வித்­துள்ள பொலி­ஸார் அவற்­றின் அடிப்­ப­டை­யி­லும் தற்­போது விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்­கின்­ற­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கும், தற்­போது வாள்­வெட்­டுக் குற்­றச்­சாட்­டில் சிறை­யில் உள்ள விக்­ரர் என்ற நப­ருக்­கும், வேறு குழுக்­க­ளுக்­கும் இடையே தொடர்­பு­கள் உள்­ளமை விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

விக்­ரர் என்ற நப­ரின் பெயர் பொறிக்­கப்­பட்ட வாள்­க­ளின் ஒளிப்­ப­டங்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன என்று தெரி­வித்த பொலி­ஸார், ஒளிப்­ப­டங்­களை ஆதா­ர­மா­கக் கொண்டு இன்­னும் பலர் தேடப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தக் குழு­வின் பிர­தான நபர் என்று கரு­தப்­ப­டும் கைத­டி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரும் தேடப்­பட்டு வரு­கின்­றார். இவர்­கள் விரை­வில் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­றும் குறிப்­பிட்­ட­னர்.

வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­ணான்டோ நேற்று மானிப்­பாய் பொலிஸ் நிலை­யம் நேரில் சென்று விசா­ர­ணை­க­ளைக் கண்­கா­ணித்­தார்.

பொலி­ஸார் எடுக்க வேண்­டிய மேல­திக நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக ஆலோ­ச­னை­களை வழங்­கி­னார். ஒளிப்­ப­டங்­கள் மூலம் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள சந்­தே­க­ந­பர்­களை உட­ன­டி­யா­கக் கைது செய்­வ­தற்­கான பணிப்­பு­ரை­க­ளை­யும் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்­ளார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களை சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்று மானிப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like