விபத்­தில் சிக்­கிய வவுனியா சிறு­மிக்கு -பாங்­கொக் நக­ரில் சிகிச்சை!!

வவு­னியா, ஓமந்தை பன்­றிக்­கெய்­த­கு­ளப் பகுதியில் தொட­ரூந்து விபத்­தில் சிக்­கிக் காய­ம­டைந்த சிறுமி மேல­திக சிகிச்­சைக்­காக பாங்­கொக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார்.

கடந்த 16ஆம் திகதி தொட­ருந்­துக் கட­வை­யைக் கடந்த கார் தொட­ருந்­து­டன் விபத்­துக்­குள்­ளா­னது. அதில் 4 பெண்­கள் உயி­ரி­ழந்­த­னர். இரு­வர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

விபத்­தில் படு­கா­ய­ம­டைந்த 6 வய­துச் சிறு­மி­யான க.ஜெசிக்கா வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வந்­தார். மருத்­து­வர்­க­ளின் பரிந்­து­ரைக்கு அமைய, ஜெசிக்கா மேல­திக சிகிச்­சைக்­க­ளுக்­காக நேற்று தாய்­லாந்­தின் பாங்­கொக் நக­ருக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார்.

நேற்று வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் இருந்து நோயா­ளர் காவு வண்­டி­மூ­லம் வவு­னியா நகர சபை மைதா­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் அங்­கி­ருந்து சிறப்பு உலங்­கு­வா­னூர்தி மூலம் கொழும்­புக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார். அங்­கி­ருந்து விமா­னம் மூலம் பாங்­கொக் கொண்டு செல்­லப்­ப­டு­வார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like