வீட்டுத் திட்டம் வழங்குவதாக கூறி- 10 ஏக்கர் காடு திட்டமிட்டு அழிப்பு!!

வவுனியா வடக்கு சின்னடம்பன் கிராம சேவகர் பிரிவில் கரப்புக்குத்தி கிராமத்தில் சட்ட விரோதமாக பெரியமடு வன வள திணைக்களத்துக்குச் சொந்தமான சுமார் பத்து ஏக்கர் காடு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

காட்டுப் பகுதியில் 20 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதாகக் கூறி, பயனாளிகளிடமிருந்து நிதி வசூலிக்கப்பட்டு காணிகள் துப்பரவு செய்யப்பட்டன.

எனினும் காடு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதே தவிர, மக்களுக்கு பயன்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு, ஒரு சில பயனாளிகள் அத்திவாரம் வெட்டி கட்டப்பட்ட நிலையிலும், சில பயனாளிகள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையிலும் நெடுங்கேணி வன வள திணைக்களமும், அதிரடிப்படையும் இணைந்து பயனாளிகளைக் கைது செய்து வவுனியா நீதவான் நீதி மன்றில் முற்படுத்தினர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like