side Add

பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது

கனடாவுக்கு ஆள்களை அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ சிறப்புக் குற்ற விசாரணை பொலிஸ் அதிகாரிகளால் இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையர்களை மேற்படிப்புக்காக கனடா அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர் 1579650 ரூபா பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 11.45 மணியளவில், கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின், டெம்பல் வீதியில் வைத்து கைது செய்யயப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 39 வயதான பாகிஸ்தான் நாட்டு பெண் என தெரியவந்துள்ளது.

இன்று கைது செய்யப்பட்ட பெண் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like
X