6 படையினரைக் காவு கொண்ட இடத்தில் மீண்டும் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை விபத்து நடந்துள்ளது.

இதே இடத்தில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like