side Add

அடாவடியில் ஈடுபட்ட இருவருக்கு- கடூழியச் சிறை!!

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் சந்­தி­யி­லுள்ள இரும்­ப­கம் ஒன்­றுக்­குள் புகுந்து அடா­வ­டி­யில் ஈடு­பட்ட இரு­வ­ருக்கு தலா 6 மாதங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை வழங்கி யாழ்ப்­பா­ணம் நீதி­மன்ற நீதி­வான் சின்­னத்­துரை சதீஸ்­த­ரன் நேற்­றுத் தீர்ப்­ப­ளித்­தார்.

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் சந்­தி­யில் உள்ள இரும்­ப­கம் (ஹாட்­வெ­யார்) ஒன்­றின் மீது கடந்த மார்ச் 9ஆம் திகதி பிற்­ப­கல் கும்­பல் ஒன்று தாக்­கு­தல் நடத்­தி­யி­ருந்­தது. தாக்­கு­த­லை­ய­டுத்து 4 பேர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். மேலும் பொலி­ஸா­ரால் தேடப்­பட்­ட­வர்­க­ளில் ஒரு­வர், சட்­டத்­த­ரணி ஊடாக மன்­றில் முற்­பட்­டார். பின்­னர் 4 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சம்­ப­வம் தொடர்­பில் 9 பேர் கைது செய்­யப்­பட்­ட­து­டன், மேலும் ஒரு­வரை அடை­யா­ளம் காண­மு­டி­ய­வில்லை என்று நீதி­ம ன்­றில் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கொக்­கு­வில் சந்­தி­யில் நண்­பன் செந்­தூ­ர­னின் பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்­டா­டிய போது ஏற்­பட்ட தக­ராறை அடுத்தே ஹாட்­வெ­யார் மீது தாக்­கு­தல் நடத்­தி­னோம் என சந்­தே­க­ந­பர்­கள் தெரி­வித்­தாக பொலி­ஸார் நீதி­மன்­றுக்கு அறி­வித்­த­னர்.

சில மாதங்­க­ளின் பின்­னர் சந்­தே­க­ந­பர்­கள் அனை­வ­ருக்­கும் பிணை வழங்­கப்­பட்­டது. இந்த நிலை­யில் 9 பேருக்­கும் எதி­ராக பொலி­ஸார் நேற்று யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் குற்­றப்­பத்­தி­ரி­கையை தாக்­கல் செய்­த­னர்.

எனி­னும் 9 சந்­தே­க­ந­பர்­க­ளில் 4 பேர் மட்­டும் நேற்று நீதி­மன்­றில் முன்­னி­லை­யா­கி­னர். அவர்­க­ளுக்கு குற்­றப்­ப த்­தி­ரிகை வாசித்­துக் காண்­பிக்­கப்­பட்­டது. சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­ட­து­டன் ஏனைய இரு­வர் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்து நிர­ப­ரா­தி­கள் என்று மன்­று­ரைத்­த­னர்.

குற்­றத்தை ஏற்­றுக்­கொண்ட இரு­வ­ருக்­கும் தலா 6 மாதங்­கள் சிறைத்­தண்ட­ னையும் தலா 3 ஆயி­ரம் ரூபா தண்­ட­மும் விதித்து நீதி­வான் தண்­ட­னைத் தீர்ப்­ப­ளித்­தார்.

ஏனைய 7 சந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வரை விடு­விக்க அனு­ம­தி­ய­ளித்த நீதி­வான் மிகுதி ஆறு பேரின் வழக்கு விசா­ர­ணை யை ஒத்­தி­வைத்­தார்.

மேலும் மன்­றில் நேற்று முன்­னி­லை­யா­கத் தவ­றி­யோ­ருக்கு திறந்த பிடி­யாணை உத்­த­ரவை வழங்­கிய நீதி­வான் சின்­னத்­து ரை சதீஸ்­த­ரன், அவர்­களை உட­ன­டி­யா­கக் கைது செய்து மன்­றில் முற்­ப­டுத்­து­மாறு பொலி­ஸாரை அறி­வு­றுத்­தி­னார்.

You might also like