அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி?

வட­மா­காண சபை­யின் முத­ல­மைச்­சர் பத­விக்கு இந்­த­முறை ஒன்­றுக்கு மேற்­பட்­ட­வர்­கள் போட்­டி­யி­டக் கூடு­மெ­னத் தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் கடந்த தேர்­த­லைப்­போ­லன்றி இம்­முறை கடு­மை­யான போட்டி நில­வு­மெ­ன­வும் எதிர்வு கூறப்­ப­டு­கி­றது. கூட்­ட­மைப்­பின் சார்­பில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரான மாவை சேனா­தி­ராசா முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டு­வது அநே­க­மாக உறு­தி­யா­கி­விட்­டது. கடந்த முறை­யும் இவர் போட்­டி­யி­டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதி­லும் கடைசி நேரத்­தில் விக்­னேஸ்­வ ­ரன் நுழைக்­கப்­பட்­ட­தால் போட்­டி­யி­லி­ருந்து பின்­வாங்க நேரிட்­டது.

இதே­வேளை விக்­னேஸ்­வ­ரன் தொடர்­பாக மாறு­பட்ட தக­வல்­கள் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன. அவர் தனிக்­கட்­சி­யொன்றை ஆரம்­பித்து மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வா­ரென ஒரு தக­வல் தெரி­விக்­கின்­றது. வேறு கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் அவர் போட்­டி­யி­டு­வ­தற்­கான சாத்­தி­யம் தொடர்­பா­க­வும் பேசப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை மாகாண சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­டைந்த பின்­னர் கூட்­ட­மைப்­பின் தேசி­யப் பட்­டி­யல் மூல­மாக அவர் நாடா­ளு­மன்­றம் செல்­வா­ரென இன்­னொரு தக­வல் தெரி­விக்­கின்­றது. இது தொடர்­பாக அவ­ரி­டமே கேட்­டால் தரு­ணம் வரும்­போது பதில் கூறு­வேன் எனப் பதி­ல­ளிக்­கின்­றார். அவர் மதில்­மேல் பூனை­யாக இருப்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது. ஈபி­டி­பி­யின் தலை­வ­ரான டக்­ளஸ் தேவா­னந்­தா­வும் முத­ல­மைச்­சர் பத­வி­யில் கண்­வைத்­துள்­ளமை தெரி­ய­வ­ரு­கின்­றது. அவர் இது தொடர்­பாக வெளிப்­ப­டை­யா­கவே தனது கருத்­தைப் பதிவு செய்­துள்­ளார். இவர்­க­ளை­விட வேறு சில­ரும் போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பும் உள்ளதென்பதை மறுத்­து­விட முடி­யாது.

மாகா­ண­சபை நிர்­வா­கம் என்­பது
இலங்­கைக்­குத் தேவை­யற்­றதே

இலங்­கை­யைப் போன்­ற­தொரு சிறிய நாட்­டில் மாகாண சபை நிர்­வா­கம் அவ­சி­ய­மற்­ற­தொன்­றா­கும். இந்­தியா போன்ற பெரிய நாடு­க­ளில் அமைந்­துள்ள மாநி­லங்­கள் இலங்­கை­யை­வி­டப் பெரி­யன. எமக்கு அண்­மை­யில் அமைந்­துள்ள தமிழ்­நாடு மாநி­லம் இவற்­றை­வி­ட­வும் மிகப்­பெ­ரிய நிலப்­ப­ரப்­பைக் கொண்­டது.

சுமார் 7 கோடிக்­கும் மேற்­பட்ட மக்­கள் அங்கு வசிக்­கின்­ற­னர். அங்கு ஒரு மாநில நிர்­வா­கம் உள்­ளது. முத­ல­மைச்­சர் ஒரு­வ­ரும் உள்­ளார். அங்கு மாநி­லங்­க­ளுக்கு காணி, பொலிஸ் உட்­பட முக்­கிய அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தால் சீரான நிர்­வா­கம் செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இங்கு அந்த நிலை காணப்­ப­ட­வில்லை.

வடக்­கில் அடா­வ­டிக்­கு­ழுக்­க­ளின் அட்­ட­கா­சம் தலை­தூக்­கி­யுள்ள போதி­லும் அத­னைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு மாகா­ண­ச­பை­யி­னால் முடி­ய­வில்லை. தமி­ழர்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­க­ளில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் அர­சின் ஆத­ர­வு­டன் தாரா­ள­மா­கவே இடம்­பெற்று வரு­கின்­றன. காணி அதி­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டா­த­தால் இதை­யும் வேடிக்கை பார்க்வே மாகா­ண­ ச­பை­யி­னால் முடி­கின்­றது. இதைப்­போன்று பல விட­யங்­க­ளைக் குறிப்­பிட முடி­யும்.

வட­மா­காண சபை
சாதித்­தது என்ன?

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் 2013ஆம் ஆண்டு இடம்­பெற்­றது. இந்த ஐந்து வருட காலத்­தில் அத­னால் சாதிக்க முடிந்­த­வற்றைப் பட்­டி­யிட்­டால் எது­வுமே கண்­க­ளுக்­குத் தெரி­யாது. ஆனால் மாகாண சபைக்­கான செல­வி­னங்­கள் வானை எட்டி நிற்­கின்­றன. நாட்டு மக்­க­ளின் வரிப்­ப­ணம் வீணா­கச் செல­வ­ழிக்­கப்­ப­டு­வ­தற்கு வட­மா­காண சபையை உதா­ர­ண­மா­கக் குறிப்­பி­ட­மு­டி­யும். வடக்கு–கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள் பாது­காப்­பில்­லாத சூழ்­நி­லை­யில் இருக்­கின்­ற­னர். அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான நிலங்­கள் அடாத்­தாக அப­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

அந்­நி­யர்­க­ளின் குடி­யேற்­றங்­க­ ளால் அவர்­க­ளின் இனப் பரம்­பல் வீழ்ச்­சி­யைக் கண்டு வரு­கின்­றது. இத­னால் கல்வி, வேலை­வாய்ப்பு, அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வம் ஆகி­ய­வற்­றில் பெரும் பாதிப்பு ஏற்­ப­டப் போகின்­றது. இவற்­றை­யெல்­லாம் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் உணர்ந்து கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. இனி­மேல் மாகா­ண­ச­பைத் தேர்­தல் இடம்­பெ­றும்­போது எமது அர­சி­யல்­வா­தி­கள் பத­வி­க­ளைப் பிடிப்­ப­தற்­காக ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தரக் குறை­வாக விமர்­சிப்­ப­தி­லேயே தமது காலத்தைக் கடத்­தப் போகின்­ற­னர்.

அப்­போது மக்­களை அவர்­கள் மறந்­து­வி­டு­வார்­கள். பதவி ஒன்றே அவர்­க­ளது இலட்­சி­ய­மாக இருக்­கும். பத­வி­யில் அமர்ந்­து­விட்­டா­லும் மக்­க­ளின் நினைவு இவர்­க­ளுக்கு வரப்­போ­வ­தில்லை. முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தற்­குப் போட்­டி­யி­டு­ப­வர்­கள் மாகா­ண­ச­பைக்­கு­ரிய அதி­கா­ரங்­க­ளை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். தாம் பதவி வகிப்­ப­தால் எதை­யா­வது சாதிக்க முடி­யுமா? என்­ப­தை­யும் யோசித்­துப் பார்க்க வேண்­டும். அதி­கா­ர­மில்­லாத பத­விக்­குப் போட்டி தேவையா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close