அதிகாரம் மிக்க அரசியலில் பெண்களின் பங்களிப்பு

பெண்­கள் இன்று அனைத்­துத்­து­றை­க­ளி­லும் கால் பதித்து நிற்­கின்­ற­னர். ஒரு காலத்­தில் இவர்­கள் வீட்­டுக்­குள் முடங்­கிக் கிடக்க வேண்­டும் என்று தடுக்­கப்­பட்­டி­ருந்­த­னர். ஆனால் தமக்கு இடப்­பட்ட தடை­க­ளை­யெல்­லாம் உடைத்­தெ­றிந்து விட்­டுப் பெண்­கள் ஆண்­க­ளுக்­குச் சமமான வகை­யில் வீறு நடை போட்டுச் செயற்­ப­டு­கின்­ற­ னர்.

எமது நாட்­டைப் பொறுத்த வரை­யில், பெண்­க­ளுக்­குச் சகல சுதந்­தி­ரங்­க­ளும் வழங்­கப்­பட்­டுள்­ளன. உல­கின் முத­லா­வது பெண் பிர­த­ம­ரைக்­கொண்­டி­ ருந்த பெரு­மை­யும் இந்த நாட்­டுக்­கே­யு­ரி­யது. ஆனால் அர­சி­ய­லில் அவர்­க­ளின் பங்­க­ளிப்பு மிகக் குறை­வா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.ஆண்­கள் பெண்­களை ஓரம் கட்டி விடு­வ­தும், பெண்­கள் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தற்கு அக்­கறை இல்­லா­மல் இருப்­ப­தும், இதற்­கான கார­ணங்­க­ளாக இருக்­கக் கூடும். அடுத்த மாதம் இடம்­பெ­றப்­போ­கும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் காற்­பங்கு வீத­மான பெண்­களை உள்­ள­டக்­காத நிய­ம­னப்­பத்­தி­ரங்­கள் நிரா­க­ரிக்­கப்படு மென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னால் அர­சி­யல் கட்­சி­க­ளும், சுயேட்­சைக் குழுக்­க­ளும் குறித்த நிபந்­த­னையை நிறை­வேற்ற வேண்­டிய கட்­டா­யத்­தி­னுள் தள்­ளப்­பட்­டன.

இன்று ஒரு நாட்­டின்
தலை­வி­தி­யைத் தீர்­மா­னிப்­ப­வர்­கள்
அர­சி­யல்­வா­தி­களே

ஒரு நாட்­டின் தலை­வி­தி­யைத் தீர்­மா­னிக்­கும் அதிகாரம் அர­சி­யல்­வா­தி­க­ளி­டமே உள்­ளது. அர­சி­யலே சக­ல­தை­யும் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக விளங்­கு ­கின்­றது. கோடிக்கணக்­கான மக்­க­ளின் தலை­விதி, விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய அர­சி­யல்­வா­தி­க­ளின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்­கும் வட கொரி­யா­வுக்­கு­மி­டையே இடம்­பெற்று வரு­கின்ற பனிப்­போர், அணு ஆயு­தப் போர் ஒன்­றுக்கு வழி­வ­குக்­க­லா­மென்ற அச்­சம் உல­க­ள­வில் எழுந்­துள்­ளது. அமெ­ரிக்க அரச தலை­வ­ரும், வட­கொ­ரிய அரச தலை­வ­ரும் மனம் வைத்­தால் இந்­தப் போரைத் தவிர்த்­துக்­கொள்ள முடி­யும். இல்­லை­யேல் அணு ஆயு­தப்­போர் மூண்டு முழு உல­க­மும் பாதிப்­புக்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை­யும் ஏற்­பட்டு விட­லாம். அர­சி­யல் தலை­வர்­க­ளின்­சக்தி இதன் மூல­மா­கத் தௌிவா­கத் தெரி­கின்­றது.

பொறு­மைக்கு இலக்­க­ண­மா­கப் பெண்­க­ளைக் குறிப்­பி­டு­ வார்­கள். எம்­மைத் தாங்கி நிற்­கின்ற பூமி­யும் ஒரு பெண்­ணா­கவே சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்­றது. மனி­தர்­கள் பூமிக்கு எத்­த­னையோ துன்­பங்­க­ளைக் கொடுத்­த­போ­தி­லும், அது பொறு­மை­யைக்­க­டைப்­பி­டிப்­ப­தால் பூமித்­தாய் என்ற பெய­ரில் அது அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்த நிலை­யில் பெண்­கள் அர­சி­ய­லில் முழு அள­வில் ஈடு­ப­டும்­போது அவ­ச­ரப்­பட்டு முடிவு எதை­யும் எடுக்க மாட்­டார்­க­ளென நம்­ப­லாம். பெண்­க­ளி­டம் இயல்­பா­கவே அமைந்து விட்ட பொறுமை இதற்கு உத­வு­கின்­றது. மறைந்த முன்­னாள் இந்­தி­ய தலைமை அமைச்ச ரான இந்­தி­ரா­காந்தி அம்­மை­யார் ஈழத் தமி­ ழர்­கள் மீது பாசத்­தைக் காண்­பித்து வந்­தார். இதைப் பல வழி­க­ளி­லும் எம்­மால் உணர முடிந்­தது. அவ­ரது அகால மறைவு ஈழத்­த­மி­ழர்­க­ளைப் பெரி­தும் பாதித்­து­விட்­டது. அவர் தொடர்ந்­தும் பத­வி­யில் இருந்­தி­ருந்­தால் இங்­குள்ள தமி­ழர்­க­ளின் தலை­விதி வேறு­வி­த­மாக மாறி­யி।­­ருக்­கும்.

இலங்கை அர­சி­ய­லில்
பெண்­க­ளது பிர­தி­நி­தித்­து­வம் மிகக் குறை­வா­னதே

இலங்­கை­யின் நாடா­ளு­மன்­றம், மாகா­ண­ச­பை­கள், உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் ஆகி­யவை பெண்­க­ளின் பிர­தி­நி­தித்­து­ வத்தை அதி­கம் கொண்­டி­ராத நிலையே தற்­போது காணப்­ப­டு­கின்­றது. இதை இல்­லா­தொ­ழிக்­கும் வகை­யில் தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் அறி­வித்­தல் வெளி­யா­கி­யுள்­ளது.

இது சரி­வ­ரக் கடைப்­பி­டிக்­கப்­பட்டு தேர்­த­லில் பெண்­கள் வெற்­றி­யும் பெற்­று­விட்­டால் அர­சி­ய­லில் அவர்­க­ளின் பங்­க­ளிப்பு சரி­யான திசையை நோக்கி நகர வாய்ப்­ப­மை­யும். பெண்­கள் எந்­தத் துறை­யில் பிர­கா­சிப்­ப­தற்­கும் கல்வி அறிவு மிக­வும் முக்­கி­ய­ மா­ன தா­கும். கல்­வி­யில் சிறப்­புப் பெறாத பெண்­க­ளால் எந்­த­வொரு விட­யத்­தி­லும் துணி­வு­டன் செயற்­பட முடி­யாது. கல்வி அவர்­க­ளுக்கு மனத்­தை­ரி­யத்தை இயல்­பா­கவே வழங்கி விடு­கின்­றது. சமூ­கம் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­கின்­றது. படித்த பெண்­கள் அர­சி­ய­லுக்­குள் நுழை­ யும்­போது அவர்­க­ளால் அதி­கம் சாதிக்­க­மு­டி­யும்.

ஆணா­திக்­கப் போக்கை முறி­ய­டிக்க பெண்­கள் பெரு­ம­ள­வில் அர­சி­ய­லில் ஈடு­பட வேண்­டும் ஆணா­திக்­கம் மிகுந்த இந்த நாள்­க­ளில் அதை முறி­ய­டிக்க வேண்­டு­மா­னால், பெண்­கள் அர­சி­ய­லின் உச்­சத்­தைத் தொட்டு நிற்க வேண்­டும். மறைந்த ஜெய­ல­லிதா தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, அமைச்­சர் பத­வி­க­ளில் அமர்ந்­தி­ருந்த ஆண்கள், அவ­ரது கால்­க­ளில் விழுந்து வணங்­கு­வ­தைத் தமது வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­த­னர். எப்­போ­தும் ஜெய­ல­லி­தா­வுக்கு முன்­னால் கைக­ளைக் கட்­டி­ய­வாறு கூனிக்­கு­றுகி நிற்­பதை ஒரு கௌர­வக் குறை­வான செய­லாக அவர்­கள் நினைத்­த­தில்லை.

தாம் நன்மை பெற வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தமது ஆணா­திக்க உணர்வை இவர்­கள் துறந்து நின்­றமை பரி­தா­பத்­தையே ஏற்­ப­டுத்­தி­யது. வழக்­க­மா­கவே அதி­கா­ரத் திமி­ரும், செருக்­கும் கொண்­டி­ருந்த ஜெய­ல­லிதா இத்­த­கைய ஆண்­களை அவ­ம­திக்­கும் வகை­யில் நடந்து கொள்­ளத்­த­வ­ற­வில்லை.
இன்­றைய நவீன உல­கில், பெண்­கள் எத்­த­னையோ சாத­னை­க­ளைப் புரிந்து வரு­கின்­ற­னர். விண்­வௌிப் பய­ணத்­தைக்­கூட அவர்­கள் மேற்­கொள்­கின்­ற­னர்.

இதற்­குத் துணிச்­ச­ லும், உயிர் குறித்த அச்­ச­மற்ற தன்­மை­யும் வேண்­டும். ஆகவே அர­சி­ய­லில் நுழைந்து சாதித்­துக் காட்­டு­வது பெண்­க­ளுக்கு ஒரு கஷ்­ட­மான காரி­ய­மாக இருக்­கப்­போ­வ­தில்லை. ஊழ­லற்ற, செம்­மை­யான அர­சி­ய­லுக்­குப் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­னது. இதை­யொரு காலத்­தின் கட்­டா­ய­மா­க­வும் கருத முடி­யும்.

You might also like