அதிகாலை நடந்த துயரம் -விபத்தில் ஐவர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு – வெலிகந்த வீதியின் கொலகன வாடிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மனம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிப் பயணித்த உழவு இயந்திரத்துடனன் பின்புறமாகச் சென்ற வான் மோதி விபத்து நடந்துள்ளது.

வெலிகந்த, போவத்த பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like