அதிவேகமாக பயணிக்கும் தனியார் பேருந்துக்கள்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பயணிக்கும் தனியார் பேருந்துக்கள் அதிவேகமாகப் பயணிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும், தொழில் பேட்டைகளில் பணிபுரிபவர்களையும் ஏற்றிசெல்லும் தனியார் பேருந்துக்கள் அதிவேகமாகச் செல்கின்றன என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் வீதியில் பயணிப்போர் பேருந்துகளைக் கண்டால் ஒதுங்கி நிற்க வேண்டிய நிலமையும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like