அமெரிக்க அரசுக்கு -எதிர்காலம் இல்லை!!

அமெ­ரிக்க அதி­பர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆட்­சிக்­கா­லத்­தில் சாதனை என்று சொல்­லிக்­கொள்­ளும் வகை­யில் மிகப் பெரிய கட்­டு­மா­னம் எதை­யும் அவர் மேற்­கொள்­ள­வில்லை. இப்­படி மேற்­கொள்­ளாத முதல் அதி­பர் அதி­லும் குடி­ய­ர­சுக் கட்­சி­யின் அதி­பர் அவர் மட்­டு­மல்ல. பல அதி­பர்­கள் இவ்­வாறு உள்­ள­னர். ஆனால், ஆபி­ர­காம் லிங்­கன் அதி­ப­ராக இருந்­த­போது நில மானி­யங்­களை வழங்கி, கண்­டங்­க­ளுக்கு இடை­யி­லான ரயில் பாதையை உரு­வாக்­கி­னார். திய­டோர் ரூஸ்­வெல்ட், பனாமா கால்­வாய் வெட்­டி­னார். ஐஸன்­ஹோ­வரோ அமெ­ரிக்க மாநி­லங்­க­ளுக்கு இடை­யில் நெடுஞ்­சா­லை­களை அமைத்­தார்.

அதி­பர் ட்ரம்ப் இப்­போது கட்ட விரும்­பும் ‘சுவர்’ வித்­தி­யா­ச­மா­னது. அவ­ரால் கட்ட முடி­யாது என்­ப­தற்­காக மட்­டு­மல்ல ட்ரம்புக்கு முந்­தைய அதி­பர்­கள் மேற்­கொண்ட கட்­டு­மா­னங்­கள் அனைத்­துமே மக்­களை ஒன்று சேர்க்­க­வும் அவர்­க­ளுக்­கும் நாட்­டுக்­கும் பயன்­த­ர­வும் உத­வின. அமெ­ரிக்­கா­வை­யும் மெக்­சிக்­கோ­வை­யும் பிரிக்க ட்ரம்ப் கட்ட விரும்­பும் பிரம்­மாண்­ட­மான மதில் அமெ­ரிக்­கர்­க­ளை­யும் மெக­சிக்­கர்­க­ளை­யும் மட்­டு­மல்ல, அமெ­ரிக்­கர்­க­ளுக்­குள்­ளே­யே­கூட பிளவை ஏற்­ப­டுத்­தி­வி­டும். இது அச்­சத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கட்­டு­மா­னம், இதில் மக்­க­ளுக்கு எதிர்­கா­ல­மில்லை.

வெற்­றுப் பேச்­சு­கள்
அதி­ப­ரா­கப் பதவி வகித்த இத்­தனை ஆண்­டு­க­ளில் ட்ரம்ப் ஏன் எதை­யும் கட்­ட­வில்லை? அர­சி­யல் பரப்­பு­ரைக்­கா­க­வும் தேர்­தல் ஆதா­யத்­துக்­கா­க­வும் பொது­மக்­கள் வரிப் பணத்­தில் எதை­யா­வது உரு­வாக்கி, அதில் தன்­னு­டைய பெய­ரைப் பொறித்­து­விட வேண்­டும் என்ற விருப்­பம் உள்­ள­வர்­தான் ட்ரம்ப். 2016 அதி­பர் தேர்­தல் பரப்­பு­ரை­யின்­போது சுவர் கட்­டு­வ­தைப் பற்றி மட்­டும் அவர் பேச­வில்லை, அமெ­ரிக்­கா­வின் அடித்­த­ளக் கட்­டு­மா­னத்­தையே பேர­ள­வில் உரு­வாக்­கப் போவ­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

மாதங்­கள் பல உருண்­டோ­டி­யும் செய­லற்ற நிலை­யி­லேயே அவர் தொடர்­கி­றார். ஓராண்­டுக்கு முன்­னால்­கூட அமெ­ரிக்க வர­லாற்­றி­லேயே இது­வரை இருந்­தி­ராத வகை­யில் மிகப் பெரிய, மிகத் துணிச்­ச­லான அடித்­த­ளக் கட்­டு­மா­னத்­தில் முத­லீடு செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தார். ஆனால், எது­வும் நடக்­க­வில்லை.

செய­லற்ற தன்மை
நொறுங்­கிக்­கொண்­டி­ருக்­கும் நெடுஞ்­சா­லை­கள், பாலங்­கள், தண்­ணீர்க் குழாய்­கள் போன்­ற­வற்றை நீக்­கி­விட்டு, புதி­தாக உரு­வாக்க ஏன் ட்ரம்­பால் முடி­ய­வில்லை அல்­லது விரும்­ப­வில்லை என்ற கேள்வி எழு­கி­றது. அடித்­த­ளக் கட்­ட­மைப்­பில் அதி­கம் முத­லீடு செய்­யப்­ப­டு­வ­தைத்­தான் மக்­கள் விரும்­பு­கி­ றார்­கள். பொது நன்­மைக்­கான முத­லீ­டு ­களை மேற்­கொண்­டால் ஜன­நா­ய­கக் கட்­சி­யி­ட­மி­ருந்­து­கூட கணி­ச­மான ஆத­ர­வைப் பெற்­று­விட முடி­யும்; அது பொரு­ளா­தா­ரத்­தைக் கைதூக்­கி­வி­டும். அரசு நிர்­வா­கம் திற­னி­ழந்­து­விட்­டது, குழப்­பத்­தில் இருக்­கி­றது என்ற கண்­ணோட்­ட­மும் மாறி­வி­டும்.

மேலும், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அடித்­த­ளக் கட்­ட­மைப்பு தொடர்­பாக வெறும் பேச்­சு­தான் தொட­ரும், செயல் எது­வும் இருக்­காது என்றே தோன்­று­கி­றது, ஏன் இந்த செய­லற்ற தன்மை?

இதற்கு முக்­கி­யக் கார­ணம் நிதி­தான் என்று அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கூறு­கின்­ற­னர்; அடித்­த­ளக் கட்­டு­மா­னங்­க­ளுக்கு எப்­ப­டிச் செல­வி­டு­வது என்­ப­தில் குடி­ய­ரசு, ஜன­நா­ய­கக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் கருத்­தொற்­றுமை ஏற்­பட்­டால்­தான் நிதியை ஒதுக்க முடி­யும். ஆனால், இது நம்­பும்­ப­டி­யாக இல்லை. 2017ஆம் ஆண்­டின் நிதி­நிலை அறிக்­கை­யில் 2 லட்­சம் கோடி டொலர்­கள் மதிப்­புக்கு வரிச் சலுகை அளித்­தது ட்ரம்­பின் குடி­ய­ர­சுக் கட்சி. மக்­கள் அந்­தப் பணத்தை அப்­ப­டியே தொழில் துறை­யில் முத­லீடு செய்­வார்­கள், அது உற்­பத்­தி­யை­யும் வேலை­வாய்ப்­பை­யும் உரு­வாக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. அப்­படி எது­வும் நிகழ்ந்­த­தா­கச் சுவடே இல்லை. இப்­ப­டி­யொரு சலு­கையை ஏன் வழங்­கி­னோம் என்று அர­சும் வருத்­தப்­ப­ட­வில்லை!

மேம்­போக்­கான பார்வை
தாங்­கள் விரும்­பும் பொருள்­களை வாங்க, கடன் வாங்­கு­வது குறித்து குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் கவ­லைப்­ப­டு­வதே கிடை­யாது. நிதிப் பற்­றாக்­குறை குறித்த அச்­சம் அதீ­த­மா­னது என்­பது ஜன­நா­ய­கக் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளின் கருத்து. எனவே, அடித்­த­ளக் கட்­ட­மைப்­புக்­கா­கக் கடன் வாங்­கிச் செலவு செய்­வ­தற்­குக்­கூட அவர்­கள் ஆத­ரவு தரு­வார்­கள்.

சுருக்­க­மா­கச் சொன்­னால், பணம் இல்லை என்­ப­தால் அடித்­த­ளக் கட்­ட­மைப்­பு­க­ளில் செல­வு­செய்ய முடி­யா­மல் போய்­வி­ட­வில்லை. உண்­மை­யான தடை ட்ரம்ப், அவ­ரு­டைய அதி­கா­ரி­கள், அவ­ரு­டைய கட்சி ஆகி­ய­வை­தாம். அமெ­ரிக்­கா­வுக்­குத் தேவைப்­ப­டும் பொது முத­லீட்­டுக்­கா­கச் செல­விட அவர்­கள் தயா­ராக இல்லை. அவர்­கள் எதை­யும் உரு­வாக்க மாட்­டார்­கள்.
ட்ரம்ப் அர­சில் உள்ள அதி­கா­ரி­கள், வெவ்வேறு அடித்­த­ளக் கட்­ட­மைப்­புத் திட்­டங்­களை முன்­வைக் கிறார்­கள்,

ஆனால், எல்­லாமே ‘மேம் போக்­கான யோச­னை­கள்’­தான். அவற்­றில் பொது முத­லீட்­டுக்கு அதிக வாய்ப்­பு­க­ளும் கிடை­யாது. அதே­ச­ம­யம், பொதுப் பணத்தை எடுத்து தனி­யார் முத­லீட்­டுக்கு உத­வும் திட்­டங்­க­ளில் செல­வி­டு­வ­தி­லேயே அதி­கா­ரி­கள் ஆர்­வ­மாக இருக்­கின்­ற­னர். ஏன் கட்­டு­மா­னங்­க­ளில் செல­விட விரும்­பு­வ­தில்லை? செலவு அதி­க­ரித்­து­வி­டா­மல் கட்­டுப்­ப­டுத்த விரும்­பு­கின்­ற­னர். அது­மட்­டு­மல்ல, பொதுச் சொத்­து­க­ளைத் தனி­யார் மயப்­ப­டுத்­த­வும் அவர்­க­ளு­டைய திட்­டங்­கள் உத­வு­கின்­றன. என­வே­தான், புது முத­லீட்­டில் ஆர்­வம் காட்­டு­வ­தில்லை. உண்­மை­யான அடித்­த­ளக் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்­கான முத­லீடு என்­றால், மாற்­றுக் கட்­சி­யாக இருந்­தா­லும் ஜன­நா­ய­கக் கட்­சி­யி­னர் ஆத­ரவு தெரி­விப்­பார்­கள்.

‘சலு­கை­சார் முத­லா­ளித்­து­வத்தை’ ஆத­ரிக்­கும் எண்­ணம் குடி­ய­ர­சுக் கட்­சி­யி­ன­ருக்கு இருப்­ப­தால், பொது முத­லீடு முக்­கி­யத்­து­வம் பெற­வில்லை என்­பதே உண்மை.

ட்ரம்ப் மட்­டு­மல்ல, குடி­ய­ர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த இதர நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் பொது முத­லீட்­டுத் திட்­டம் என்­றால் ஆர்­வம் காட்­டு­வ­தில்லை. ட்ரம்­பின் பத­விக் காலத்து முத­லி­ரண்டு ஆண்­டு­கள் இப்­ப­டியே அவரை மிரட்டி, பொது முத­லீட்­டுக்கு நிதி ஒதுக்­கா­மல் பார்த்­துக்­கொண்­ட­னர். பிறகு, அதற்கு போலி­யான கார­ணங்­க­ளை­யும் கண்­டு­பி­டித்­துக் கூற­லா­யி­னர்.

தண்­டிக்­கப்­ப­டும் மக்­கள்
நவீன கால­மாக இருந்­தா­லும், பழ­மை­வாத அர­சி­யல் சிந்­த­னை­யா­ளர்­கள் பொது நன்­மைக்­காக அரசு செல­வு­செய்­வதை வெறுக்­கி­றார்­கள். அத­னால், அமெ­ரிக்­கர்­க­ளின் வாழ்க்­கைத் தரம் உய­ரும் என்­றா­லும் வேண்­டாம் என்­கி­றார்­கள். மக்­க­ளு­டைய வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்­தும் விதத்­தில் அர­சின் செல­வு­கள் அமைந்­தால் நிர்­வா­கத்­தில் அர­சுக்கு ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பு அதி­க­ரித்­து­வி­டும். தான் சார்ந்­துள்ள குடி­ய­ர­சுக் கட்சி, அர­சின் தலை­யீடு மிகக் குறை­வா­கவே இருக்க வேண்­டும் என்று விரும்­பு­வதை டிரம்ப் முழு­தாக ஏற்­க­வில்லை; ஆயி­னும் அவ­ரி­ட­முள்ள ‘குறைந்த செய­லாற்­ற­லா­னது’ மக்­க­ளுக்கு உத­வு­வ­தை­விட – அவர்­க­ளைத் தண்­டிப்­ப­தி­லேயே செல­வா­கிக் கொண்­டி­ருக்­கி­றது.

அப்­ப­டி­யா­னால், அமெ­ரிக்­காவை யார்­தான் புதுப்­பித்து உரு­வாக்­கு­வார்­கள்? ட்ரம்­புக்­கும் அவ­ரு­டைய கட்­சிக்­கும் வாய்ப்பு தரப்­பட்­டது. அவர்­கள் அதன்­படி செயல்­பட மறுத்­து­விட்­ட­தால் அடுத்த வாய்ப்பு ஜன­நா­ய­கக் கட்­சிக்­குத்­தான் தரப்­பட வேண்­டும். அவர்­கள் புதி­தாக அறி­வித்­துள்ள ‘பசுமை செயல்­திட்­டம்’ போதிய விவ­ரங்­க­ளு­டன் இல்லை என்­றா­லும், பொது நல­னில் அக்­கறை கொண்ட பொது முத­லீட்டை அது­தான் புதுப்­பிக்­கும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது.

You might also like