side Add

அர­சி­யல் நெருக்­கடி தீர யாழ்ப்­பா­ணத்­தில் வழி­பாடு!!

கொழும்பு அர­சி­ய­லில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை விரை­வில் தீர்க்­கப்­பட்டு அமைதி ஏற்­ப­ட­வேண்­டும் என்று யாழ்ப்­பா­ணம் மரி­யன்னை பேரா­ல­யத்­தில் நேற்று சிறப்பு நற்­க­ருணை வழி­பாடு நடை­பெற்­றது.

அம­ல­மரி தியா­கி­கள் சபை­யின் வட­மா­காண முதல்­வர் அருட்­தந்தை எட்­வின் வசந்­த­ராஜா தலை­மை­யில் முற்­ப­கல் 10 மணிக்கு இந்த ஆரா­தனை ஆரம்­ப­மாகி மதி­யம் 12 மணி வரை நடை­பெற்­றது.

“நாட்­டில் மக்­களை வழிப்­ப­டுத்­த­வேண்­டிய அர­சி­யல் தலை­வர்­கள் தமது சுய­ந­லங்­க­ளின் அடிப்­ப­டை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். அவர்­க­ளின் இந்­தச் செயற்­பா­டு­க­ளால் மக்­கள்­தான் பாதிக்­கப்­ப­டு­வார்­கள். மனி­தர்­க­ளு­டன் பேச்சு நடத்தி நெருக்­க­டி­நி­லைக்­குத் தீர்­வைக் காண்­பது இய­லாத காரி­யம். தலை­வர்­க­ளுக்கு எல்­லாம் தலை­வ­ரான எல்­லாம் வல்ல இறை­வ­னி­டம்­தான் அமை­தி­வேண்டி வழி­ப­ட­வேண்­டும். நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்­ப­நி­லை­யைத் தீர்ப்­ப­தற்கு நீதித்­துறை பக்­கச்­சார்­பின்றி தீர்ப்­ப­ளிக்­க­வேண்­டும் என்று இறை­வ­னி­டம் வேண்­டி­நிற்­கின்­றோம்” என்று ஆரா­தனை உரை­யில் அருட்­தந்தை எட்­வின் வசந்­த­ராஜா கோரி­னார்.

You might also like