side Add

அரசியலைக் களங்கப்படுத்துவது- அரசியல்வாதிகளுக்குத் தகுமா?

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்­பது மக்­க­ளுக்­கா­னதே. இதில் சந்­தே­கமே இல்லை. ஆனால் அதை அர­சி­யல்­வா­தி­க­ளின் சட்­டைப்­பை­களை நிரப்­பு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இவ்­வாறு அறி­வித்­தி­ருக்­கி­றார் அர­ச­த­லை­வர். அவர் கூறி­ய­தில் உண்மை இருக்­கின்­ற­போ­தி­லும் நடை­மு­றை­யில் அதைக் காண­மு­டி­ய­வில்லை. அர­சி­ய­லுக்­குள் நுழை­யும் போது நல்­ல­வர்­க­ளா­கத் தம்மை இனம் காட்­டிக் கொள்­ப­வர்­கள் அங்கு சென்­ற­தும் தமது இயல்பை மாற்­றிக்­கொள்­கின்­ற­னர். சிலர் பணம் சம்­பா­திப்­ப­தற்­கென்றே அர­சி­ய­லைத் தேர்ந்­தெ­டுக்­கின்­ற­னர். இவர்­க­ளால் தமது நோக்­கத்தை நிறைவு செய்­ய­வும் முடி­கின்­றது.

ஜன­நா­ய­கத்­தின்
வெளிப்­பா­டு­தான்
ஐன­நா­ய­கத்­தின் ஓர் அங்­க­மா­கத்­தான் அர­சி­யல் பார்க்­கப்­ப­டு­கின்­றது. மக்­க­ளின் ஜன­நா­யக உரி­மை­களை அர­சி­யல் ஊடா­கப் பெற்­றுக் கொடுக்­க­வும் முடி­கின்­றது. ஆனால் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரின் தவ­றான நட­வ­டிக்­கை­கள் முழு அர­சி­ய­லுக்­கும் களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­வி­டு­வ­து­முண்டு. இதன் கார­ண­மா­கவே அர­சி­யலை வெறுத்த பேர­றி­ஞர் பேர்­னாட்சா அதை­யொரு சாக்­கடை என்று சாடி­னார்.

இலங்­கை­யின் அர­சி­யல் மெத்­தப்­ப­டித்­த­வர்­க­ளா­லும் அவ்­வ­ளவு படிக்­கா­த­வர்­க­ளா­லும் எப்­போ­துமே நிறைந்து காணப்­ப­டு­கின்­றது. ஒரு காலத்­தில் சட்­டம் பயின்­ற­வர்­கள்­தான் அர­சி­ய­லுக்கு இலா­யக்­கா­ன­வர்­கள் என்­ற­தொரு தோற்­றப்­பாடு இருந்­த­து­முண்டு. இதற்­குப் பல்­வேறு கார­ணங்­க­ளைக் கூற­மு­டி­யும்.

இந்த நாட்­டில் இன­வா­தத்­துக்கு ஆரம்­பப்­புள்ளி இட்­ட­பெ­ருமை மறைந்த முன்­னாள் தலைமை அமைச்­சர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­க­வையே சாரும். அவர் இலண்­டன் வரை சென்று உயர்­கல்­வி­யைக் கற்ற ஒரு கல்­வி­மான். மிகச் சிறந்த பேச்­சா­ள­ரா­க­வும் அவர் திகழ்ந்­தார். அவர் அர­சி­ய­லுக்­குள் நுழைந்­த­போது ஐக்­கிய தேசி­யக் கட்சி பத­வி­யில் அமர்ந்­தி­ருந்­தது.

அதை­யொரு முத­லா­ளித்­து­வக் கட்சி என­வும் கூறு­வார்­கள். இத­னால் தம்­மை­யொரு சோச­லி­ச­வா­தி­யா­கக் காட்­டிக்­கொண்ட பண்­டா­ர­நா­யக்க கீழ்த்­தட்டு மக்­க­ளைக் கவ­ரும் வகை­யில் தமது அர­சி­யல் காயை நகர்த்­திச் சென்­றார். அது­மட்­டு­மல்­லாது இன­வா­தம் என்ற ஆயு­தத்­தை­யும் கையில் ஏந்­திக் கொண்­டார். பத­வி­யேற்று 24 மணி நேரத்­தில் சிங்­க­ளத்தை அரச கரும மொழி­யாக மாற்­று­வேன் என அவர் கூறிய வார்த்­தை­க­ளால் பெரும்­பான்­மை­யின மக்­கள் பெரி­தும் கவ­ரப்­பட்­ட­னர். இதன் விளை­வா­கப் பண்­டா­ர­நா­யக்­க­வி­னால் ஆட்­சி­யில் அமர முடிந்­தது. அவ­ருக்­குப் பின்­னர் அவர் விட்­டுச் சென்ற பாதை­யில் பய­ணிப்­ப­தையே பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­கள் பெரி­தும் விரும்­பி­னர். இனப்­பி­ரச்­சி­னை­யின் தோற்­றத்­துக்கு இதுவே வழி­ய­மைத்­துக் கொடுத்­து­விட்­டது.

அர­சி­ய­லும் ஊழ­லும்
இரண்­ட­றக் கலந்­தவை
அர­சி­யல் வாதி­க­ளுக்­கும் ஊழ­லுக்­கும் நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கக் கூறு­வார்­கள். இதை நிரூ­பிப்­பது போன்று இந்த நாட்­டில் மட்­டு­மல்­லாது வேறு நாடு­க­ளி­லும் அர­சி­யல்­வா­தி­க­ளின் ஊழல்­கள் வெளி­வந்­துள்­ளன. கடந்த ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்ற ஊழல் மற்­றும் மோச­டி­க­ளால் நாட்­டின் பொரு­ளா­தா­ரமே கீழ்­நி­லைக்­குத் தள்­ளப்­பட்­டு­விட்­டது. ஆனால் இவை தொடர்­பாக எவ­ருமே கைது செய்­யப்­பட்­டுத் தண்­ட­னைக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வில்லை. இன்று அத்­த­கை­ய­வர்­கள்­தான் அர­சைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் எதற்­கெ­டுத்­தா­லும் அர­சி­யல்­வா­தி­க­ளையே நம்­பி­யி­ருக்க வேண்­டிய நிலை­யில் உள்­ள­னர். தமது வாக்­குப் பலத்­தி­னால் பத­வி­க­ளைப்­பி­டித்த அர­சி­யல்­வா­தி­கள் தம்மை ஏமாற்றி விட­மாட்­டார்­க­ளென்­றும் இவர்­கள் நம்­பு­கின்­ற­னர். இவர்­க­ளின் நம்­பிக்­கையை நிறை­வேற்­றி­ வைக்க வேண்­டிய பெரும் பொறுப்பு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு உண்டு. ஆனால் இவர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள் மக்­களை மறந்து செயற்­ப­டு­வ­தைக் காண­மு­டி­கின்­றது. இது மக்­க­ளுக்­குப் புரி­கின்ற மிகப்­பெ­ரிய துரோ­க­மா­கும்.

அர­சி­ய­லுக்கு ஊழல்
அழ­கா­ன­தல்ல
சில அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு தேர்­தல்­கள் இடம்­பெ­றும்­போ­து­தான் மக்­க­ளின் நினைப்பு மன­தில் தோன்­று­கின்­றது. மக்­கள் வாக்­க­ளிக்­கா­விட்­டால் பத­வி­க­ளைப் பெற­மு­டி­யாது என்­ப­தால் தேர்­தல்­க­ளின்­போது மக்­களை நாடிச் செல்­ல­வேண்­டிய தேவை அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எழும்­பு­கின்­றது. தேர்­தல் முடிந்­த­ தும் தமக்கு வாக்­க­ளித்த மக்­களை இவர்­கள் மறந்­து­வி­டு­வ­து­முண்டு.

அர­சி­ய­லைத் தூய்­மைப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அர­சி­யல்­வா­தி­க­ளி­டமே உள்­ளது. அர­சி­யல் தொடர்­பான தவ­றான எண்­ணங்­க­ளை­யும் இவர்­கள்­தான் இல்­லா­தொ­ழிக்க வேண்­டும். தம்­மீது மக்­கள் மதிப்­பும், மரி­யா­தை­யும் வைத்­துச் செயற்­ப­டும் வகை­யில் தமது செயற்­பா­டு­களை வகுத்­துக்­கொள்ள வேண்­டும்.

இதை­வி­டுத்து இன­வா­தம் பேசு­வ­தும், பிற இனத்­த­வ­ரைக் கொடு­மைப்­ப­டுத்தி அவர்­க­ளைத் துன்­பத்­தில் ஆழ்த்­து­வ­தும் ஊழல் மோச­டி­க­ளில் ஈடு­ப­டு­வ­தும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நல்­ல­தல்ல.

You might also like