அரசுக்கு ஆதரவளிக்க -கூட்டமைப்பு விதித்த நிபந்தனை!!

அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து அரசுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த வேண்டுமாயின் கல்முனை வடக்கைத் தரமுயர்த்தித் தரவேண்டும் என்று தலைமை அமைச்சர் ரணிலுக்கு நேற்றுக் கடும் நிபந்தனை விதித்தது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தால் கல்முனை வடக்கு உடன் தரமுயர்த்தப்படும் என்று தலைமை அமைச்சர் எழுத்தில் வாக்குறுதி வழங்கியதை அடுத்தே தீர்மானத்தை எதிர்த்து கூட்டமைப்பு வாக்களித்தது.

இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காக நேற்று மாலை 6.10 மணிவரை கூட்டமைப்பு கடுக்குப் பிடியில் இருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like