அரசுக்கு எதிராக பேரணி!!

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் ஏற்­பாட்­டில் இந்த அர­சுக்கு எதி­ராக மிகப்­பெ­ரும் பேர­ணி­யொன்று ஏற்­பாடுசெய்­யப்­பட்­டுள்­ளது.

அந்­தக் கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காஞ்­சன விஜ­ய­சே­கர இந்­தத் தக­வ­லைத் தெரி­வித்­தார்.

மே மாதம் முத­லாம் திகதி தொழி­லா­ளர்­கள் தினம் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதனை முன்­னிட்டு பொது­மக்­கள் முன்­ன­ணி­யா­னது திரு­கோ­ண­மா­லை­யி­லி­ருந்து கொழும்பு கம்­பல்­பிட்­டிய வரை­யில் பெரிய பேர­ணி­யொன்றை ஏற்­பாடு செய்­துள்­ளது.

இந்­தப் பேர­ணி­யா­னது ஏப்­ரல் 26ஆம் திகதி ஆரம்­ப­மாகி மே முத­லாம் திகதி கொழும்­பில் நிறை­வ­டை­ய­வுள்­ளது. அர­சின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தும் அரசை வீட்­டுக்கு அனுப்பி புதிய அர­சி­டம் ஆட்­சியை ஒப்­ப­டைக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யும் இந்த தொடர்­பே­ரணி முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான சகல ஏற்­பா­டு­க­ளும் பூர்த்­தி­யா­கி­விட்­டன – என்­றார்.

You might also like