அரச தலை­வர் தேர்­த­லில்- தமி­ழர்­க­ளின் நிலை என்ன?

2015ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லி­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லி­லும் பெரி­தும் பேசு பொரு­ளாக இருந்த புதிய அர­ச­மைப்பு, இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு, எல்­லா­வற்­றி­லும் முக்­கி­ய­மான நல்­லாட்சி மற்­றும் ஊழல் மோசடி ஒழிப்பு ஆகி­ய­வற்­றில் எவை­யும் நிறை­வேற்­றப்­ப­டா­த­போ­தும் அடுத்த அரச தலை­வர் தேர்­தல் குறித்­தும் அதில் யார் போட்­டி­யிடப் போகி­றார்­கள் என்­பது குறித்­துமே இப்­போது அதி­கம் பேசப்­ப­டு­கின்­றன. கடந்த தேர்­தல் வாக்­கு­று­தி­கள் குறித்து அக்­க­றைப்­ப­டு­வோர் யாரு­மில்லை.

கடந்த ஆட்­சி­யில் ஊழல் பேர் வழி­கள், குடும்ப ஆட்­சிக்கு வழி வகுத்­தோர் என்று ஒதுக்­கப்­பட்ட ராஜ­பக்ச குடும்­பத்­தி­னரே அடுத்த தேர்­த­லின் கதா­நா­ய­கர்­க­ளாக உயர்ந்­தி­ருக்­கி­றார்­கள். சிங்­கள இன­வாத மற்­றும் பௌத்த மத­வாத வேட்­டைக்கு அவர்­கள் தயா­ராகி வரு­கின்­றார்­கள் என்­பது உள்­ளங்கை நெல்­லிக்­கனி.

மறு­பு­றத்­தில் நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறையை ஒழிக்க வேண்­டும் என்­ப­தற்கு கடந்த தேர்­த­லில் முன்­னின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த தேர்­த­லில் அந்­தப் பத­விக்­குத் தானே போட்­டி­யி­டு­வ­தற்கு முண்­டி­ய­டிக்­கின்­றார் என்­றும் செய்­தி­கள் வரு­கின்­றன. அதி­கா­ர­மற்ற, எதிர்­கா­லத்­தில் ஒழிக்­கப்­ப­டப் போகின்ற ஒரு பத­விக்­காக ஏன் ரணில் ஏங்­கு­கி­றார் என்­கிற கேள்­வி­யும் இங்கு முக்­கி­ய­மா­னது. அப்­படி ரணில் அந்­தப் பத­வி­யில் கண் வைக்­கி­றார் என்­றாலே நிறை­வேற்று அதி­கா­ரம் ஒழிக்­கப்­ப­டப் போகின்­றது என்­பது வெறும் கட்­டுக்­க­தை­தான் என்­ப­தும் ரணிலை அறிந்த எல்­லோ­ருக்­கும் தெரிந்­ததே!

மற்­றொரு புறத்­தில் மீண்­டும் ஒரு தடவை அரச தலை­வ­ராக மாட்­டேன் என்று சத்­தி­யம் செய்­யாத குறை­யாக பத­விக்கு வந்­த­வ­ரான தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் எந்த விதத்­தில் மீண்­டும் தானே அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யும் என்­பது பற்­றிச் சிந்­தித்து வரு­கி­றார் என்­றும் செய்­தி­கள் வரு­கின்­றன.
இப்­படி அரச தலை­வர் தேர்­தல் குறித்­தும் அதில் யார் போட்­டி­யி­டப் போகி­றார்­கள் என்­றும் தெற்­குப் பர­ப­ரப்­பாக இயங்­கிக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில் அது குறித்து தமி­ழர் தரப்­பில் ஏதா­வது எதிர்­வி­னை­யாற்­றல்­கள், கருத்­தா­டல்­கள், கொள்கை வகுப்­பு­கள் இடம்­பெ­று­கின்­ற­னவா என்று கேட்­டால் இல்லை என்­பதே பதி­லாக இருக்­கின்­றது. தேர்­தல் வரும்­போது பார்த்­துக் கொள்­ள­லாம் என்­கிற வழக்­க­மான மனோ­நி­லை­யில், விட்­டேத்­தி­யான போக்­கி­லேயே தமிழ் அர­சி­யல் களம் இந்த விட­யத்­தைக் கையாள்­கின்­றது என்­பது வெளிப்­ப­டை­யா­னது.

தமிழ் அர­சி­ய­லின் இத்­த­கைய போக்கு பிரச்­சி­னைக்­கு­ரி­யது, எதிர்­கா­லத்­தில் சிக்­க­லா­னது என்­கிற அபா­யச் சங்கை ஊதி­யி­ருக்­கி­றார் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன. அரச தலை­வர் தேர்­த­லில் தமி­ழர் ஒரு­வரை நிறுத்­து­வ­தற்கு முயற்­சி­கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்­றும் அந்த நபர் வடக்­கின் முன்­னாள் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனாகஇருப்­ப­தற்கு வாய்ப்­பு­கள் உள்­ள­தா­கச் செய்­தி­கள் அடி­ப­டு­கின்­றன என்­றும் அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அத்­த­கைய நகர்வு தவ­றா­னது என்­ப­தை­யும் அது தனிச் சிங்­கள வாக்­கு­ளி­னால் ஒரு அரச தலை­வர் தேர்­தெ­டுக்­கப்­ப­டும் வாய்ப்பை வழங்­கி­வி­டும் என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார். அரச தலை­வர் தேர்­த­லில் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­கள் எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னவை என்­ப­தை­யும் விளக்­கி­யி­ருக்­கி­றார்.

அவர் கூறு­கின்ற கருத்­துக்­கள் ஆழ­மாக ஆரா­யப்­ப­ட­வேண்­டி­ய­வையே! அவர் கூறு­வ­தின்­படி தமி­ழர் தரப்­பி­லி­ருந்து அரச தலை­வர் தேர்­த­லில் ஒரு­வர் நிறுத்­தப்­ப­டு­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டால் அது சரி­யா­னதா இல்­லையா, இந்­தத் தேர்­தலை எப்­படி அணு­கு­வது என்ற விட­யங்­களை நன்கு அலசி ஆராய்ந்து தமி­ழர்­க­ளுக்கு நன்­மை­ப­யக்­கக்­கூ­டிய வகை­யில் அத­னைக் கையாள்­வ­தற்கு, கட்­சி­க­ளின் அர­சி­யல் நிர­லைக் கடந்து இந்த விட­யத்­தைக் கையாள்­வ­தற்கு ஒரு தெளி­வான கொள்கை வகுப்­புத் திட்­ட­மி­டல் தேவை. கடைசி வரை இருந்­து­விட்டு யாரோ ஒரு­வரை ஆத­ரித்து அவ­ரு­டன் இத­யத்­தால் ஒப்­பந்­தங்­கள் இருக்­கின்­றன என்று கூறி ஏமா­ளி­க­ளா­கத் தொடர்ந்­தும் நின்­று­கொண்­டி­ருப்­ப­தில் பய­னில்லை.

இனத்­தின் நலன் கருதி, நன்மை கருதி இந்த விட­யத்­தில் தமிழ் அர­சி­யல் தரப்­பு­கள் ஒருங்­கி­ணைந்த ஒரு கொள்­கை­யின் கீழ் செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்­டும். அது­மட்­டு­மல்­லா­மல் அரச தலை­வ­ரைத் தீர்­மா­னிக்­கக்­கூ­டிய சிறு­பான்மை மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைத்து அடுத்த அரச தலை­வ­ரை­யும் நாடா­ளு­மன்­றத்­தை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளத்­தக்க திட­மான கொள்கை ஒன்றை முன்­னெ­டுப்­ப­தற்­கான அர­சி­ய­லை­யும் முன்­னெ­டுக்­க­வேண்­டும். அதற்­கான பணி­களை இப்­போ­தி­ருந்தே தொடங்­க­வேண்­டும்.

You might also like